வணிகம்
ரஷ்ய எண்ணெய் தடை! அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்க்கு 66,000 கோடி இழப்பு – பங்குகள் 3% வீழ்ச்சி!

ஐரோப்பிய ஒன்றியம் (EU), உலகம் முழுவதும் இருந்து வரும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்துவிட்டது. எந்த ஐரோப்பிய நாடும் இனி ரஷ்ய எண்ணெய் வாங்க முடியாது. இதன் தாக்கம் இந்தியாவிலும் கடுமையாகவும், குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் மீது பெரிதும் தெரிகிறது.
ரிலையன்ஸ் பங்குகள் 3% க்கும் அதிகமாக வீழ்ந்துள்ளன. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 66,000 கோடி சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 15 பில்லியன் டாலர் பெறுமதியில் ஐரோப்பாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால், தற்போது அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது.
2025 நிதியாண்டில் இந்தியா ரஷ்யாவிலிருந்து 50.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள கிரூட் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவின் எண்ணெய் தேவையில் 44% ரஷ்ய எண்ணெய் பங்கு வகிக்கிறது. டிசம்பர் 2024ல் ரிலையன்ஸ், Rosneft-உடன் 10 வருட ஒப்பந்தம் செய்து, தினமும் 5 லட்சம் பேரலின் ரஷ்ய எண்ணெய் வாங்கி refining செய்துவந்தது.
இதன் மூலம், ரிலையன்ஸ் ஐரோப்பாவுக்கு பெரிதும் டீசல் உள்ளிட்ட பெட்ரோல் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இப்போது EU தடை காரணமாக அந்த வாய்ப்பு முடங்கி விட்டது.
BSE தரவுகளின்படி, கடந்த வாரம் முடிவில் ரிலையன்ஸ் பங்கு மதிப்பு ரூ. 1476.85 இருந்து, திங்கள் அன்று ரூ. 1428.20 ஆக வீழ்ந்தது. நாள் முழுவதும் ரூ. 1423.05 என்ற குறைந்த அளவை தொட்ந்தது. இதனால் ஒரே நாளில் ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ. 65,835.48 கோடி குறைந்துள்ளது.
நிபுணர்கள் கூறுகையில், எதிர்காலத்தில் ரிலையன்ஸ் பங்குகளில் மேலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் எனவும், இது நிறுவனத்துக்கு பெரிய பாதிப்பாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தடை காரணமாக, இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு புதிய சவால்கள் உருவாகியுள்ளன.




















