Connect with us

ஆன்மீகம்

புதன் அஸ்தமனம் ஜூலை 18 முதல்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு காத்திருக்கிறது!

Published

on

ஜோதிடக் கணிப்புகள் படி, கிரகங்களின் நிலைமாற்றங்கள் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இதில், ஞானத்திற்கும், பேச்சாற்றலுக்கும் காரணமான புதன் கிரகம் தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஜூலை 18ஆம் தேதி புதன் அஸ்தமனம் ஆக இருக்கிறார். இது ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீடிக்கும்.

புதன் அஸ்தமனமானாலும், சில ராசிகளுக்கு இந்த காலம் அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் வழங்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.

எந்த ராசிக்காரர்களுக்கு பலன்?

  • மிதுனம்: உணர்ச்சிபூர்வமான முடிவுகள் உங்கள் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும். பணியில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நிதிநிலை வலுவடையும். புது முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.

  • கன்னி: சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் காத்திருக்கின்றன. புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

  • விருச்சிகம்: ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சரியான முடிவுகள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். பணவரவிலும் மேம்பாடு உண்டு.

  • மகரம்: உறவுகளில் உணர்ச்சி பூர்வமான புரிதல் பெருகும். குழுவாக செய்யும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமை கூடும்.

புதன் பகவானின் அருளை பெற தினமும் இந்த ஸ்லோகத்தை உச்சரிக்கலாம்:
ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் ஸஹ புத்தாய நமஹ!

Translate »
Zarraffa’s coffee opens its store in victoria | franchise business in melbourne business franchise.