ஆன்மீகம்
மேஷத்தில் அஸ்தமிக்கும் புதன்! 4 ராசிகளுக்கு நிதி அதிர்ஷ்டம் – 8 ராசிகளுக்கு எச்சரிக்கை!!

மேஷ ராசியில் அஸ்தமிக்கும் புதன் – நிதி அதிர்ஷ்டம் தரும் 4 ராசிகள்… யார் யாருக்கு பயன்? யாருக்கு கவனம்?
மே 18, 2025 அன்று புதன் கிரகம் மேஷ ராசியில் அஸ்தமனம் அடைந்தது. இதே நாளில் ராகு மற்றும் கேது இடமாற்றம் பெற்றதால், இது ஜோதிடக் கணிப்புகளில் அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. புதன் நுண்ணறிவு, கல்வி, பேச்சுத் திறன் மற்றும் வணிகத் துறைக்கு முக்கியமான கிரகம் என்பதால், அதன் அஸ்தமன நிலை சில ராசிக்காரர்களுக்கு நன்மை தருவதாகவும், சிலருக்கு சவாலாகவும் அமையும்.
✅ அதிர்ஷ்டம் பெற்று ப்ளூம் பண்ணும் ராசிகள்:
ரிஷபம் (Taurus):
அஸ்தமனமான புதன், ரிஷபராசிக்காரர்களுக்கு நிதியில் வளம் தரும். செலவுகள் குறையும், சேமிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், மருத்துவம், இறக்குமதி-ஏற்றுமதி துறையினர் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
கன்னி (Virgo):
புதன் ஆதிக்கம் செலுத்தும் ராசியான கன்னிக்கு நல்ல நிதி வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் குடும்பத்தில் ஒற்றுமை வளரும். உறவுகள் வலுப்பெறும். பணம் சம்பாதிக்க சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். ஆனால் நிதி விவரங்களை வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது.
துலாம் (Libra):
புதன் அஸ்தமனத்துடன் குருவின் நன்மையும் சேரும். கல்வி, மேலாண்மை துறையினர் வெற்றி காணலாம். வருமானம் உயரும். வேலைப்பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சி காணப்படும்.
கும்பம் (Aquarius):
திறமையான முடிவுகள், தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை, குழந்தைகளால் மகிழ்ச்சி. உயர் கல்வி வாய்ப்பு, மன உறுதி மற்றும் வளர்ச்சி அனுபவிக்கலாம். பேச்சில் கட்டுப்பாடு வேண்டும்.
கவனம் தேவைப்படும் ராசிகள்:
மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய 8 ராசிக்காரர்கள், இந்த காலகட்டத்தில் நிதி சிக்கல், உடல் நலம், வேலை அழுத்தம், தோல் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றில் சிக்கிக் கொள்ளலாம். செலவுகள் அதிகரிக்கும். இலக்குகளை அடைவதில் சிரமம் ஏற்படலாம்.



















