சினிமா
‘தக் லைஃப்’ நாளை ரிலீஸ் – தமிழக அரசு சிறப்பு காட்சி அனுமதி வழங்கியது!

சென்னை:
கமல்ஹாசன், சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்த எதிர்பார்ப்புக்குரிய ‘தக் லைஃப்’ (Thug Life) திரைப்படம் நாளை ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டு நாளை முன்னிட்டு, தமிழக அரசு சிறப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, திரைப்பட வெளியீட்டு நாளான ஜூன் 5ஆம் தேதி மட்டும் அதிக நேர காட்சிகள் நடத்த அனுமதி வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ஒரு நாள் மட்டும் (05.06.2025) சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், நாளை முதல் காட்சி காலை 9 மணி அளவில் தொடங்கி, இறுதிக் காட்சி இரவு 2 மணி வரை திரையிடலாம் என அரசு அனுமதித்துள்ளது. இதற்காக மொத்தம் 5 காட்சிகள் திரையிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை நீக்க கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கமல் ஹாசன் தரப்பு நேற்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
