தமிழ்நாடு
தண்டலை ஆற்றில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி

மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் தண்டலை கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஞ்சித் (30) மற்றும் தினேஷ் (30) ஆகிய இருவரும் ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்திலிருந்து வயர் மூலம் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


















