தமிழ்நாடு
திருவள்ளூரில் சோகம்: குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் தவறி விழுந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேலையூர் மடத்தில் பயின்று வந்த ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் ஆகியோர் குளத்தில் நீராடச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












