வணிகம்
EPFO புதிய மாற்றம்: PF கணக்கு மாற்றம், UAN உருவாக்கம், புதிய ATM வசதி – ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம்!

EPFO அதிரடி புதுப்பிப்பு: PF கணக்கை மாற்றுவது இப்போது ஒரு கிளிக்கில் முடியும்!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்காக PF கணக்கு பரிமாற்ற மற்றும் நிர்வாக செயல்முறைகளை மாறுபடுத்தியுள்ளது. இப்போது PF கணக்கு மாற்றம் ஒரு ஸ்டெப்பில் முடியும், அதனால் வேலை மாற்றும் ஊழியர்களுக்கு மிகுந்த நேரமும் சிரப்பும் மிச்சமாகிறது.
புதிய மாற்றங்களில் முக்கியமானவை:
PF கணக்கு பரிமாற்றம் ஒரே ஸ்டெப்பில்.
பழைய மற்றும் புதிய KYC விவரங்களை ஒப்பிட எளிதாக்கம்.
தனித்துவமான பரிவர்த்தனை ஐடி.
வரிவிவரங்கள் தனியே பதிவாகும்.
புதிய Form 13 – ஒரே இடத்தில் அனைத்து PF விவரங்களும்.
UAN உருவாக்கம் – இனி நிறுவன உதவி தேவையில்லை:
இப்போது ஊழியர்கள் தங்கள் UAN (Universal Account Number) ஐ நேரடியாக உருவாக்கலாம். இதற்கு நிறுவனத்தின் தலையீடு தேவையில்லை. ஆதார் இணைப்பு இல்லாமலே UAN உருவாக்க இயலும். இது முதன்மையாக தற்காலிக/ஃப்ரீலான்ஸ் வேலைகளை செய்வோருக்கு பயனளிக்கும்.
புதிய ATM கார்டு – நேரடி பணப்பற்றுதல் வசதி:
EPFO தற்போது புதிய ATM கார்டு வசதியை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ATM கார்டு மூலம் உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து நேரடியாக சில நிமிடங்களில் பணம் பெற முடியும். இந்த வசதி மே அல்லது ஜூன் மாதங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர்களுக்கும் நன்மை:
புதிய மாற்றங்கள் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்படும். ஓய்வூதியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வருவதால், முன்னிருந்த தாமதங்கள் தவிர்க்கப்படும். செயல்முறை மேலும் பாதுகாப்பானதாகும்.


