வணிகம்
மே 3ம் தேதி காலாண்டு முடிவுகள்: SBI, DMart, Kotak Mahindra Bank உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இன்று லாபம்-இழப்புகளை வெளியிடும்!

2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் இன்று வெளியீடு!
2024-25 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டுக்கான முடிவுகளை முக்கிய listed நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. ஏற்கனவே, TCS, HCL Tech, Infosys உள்ளிட்ட முன்னணி IT நிறுவனங்களும், HDFC Bank, ICICI Bank, Yes Bank போன்ற முன்னணி வங்கிகளும் Q4 முடிவுகளை அறிவித்து விட்டன.
இந்நிலையில் மே 3ம் தேதி, பல முக்கிய listed நிறுவனங்களும், வங்கிகளும் இன்று தங்களுடைய Q4FY25 முடிவுகளை அறிவிக்கவுள்ளன.
இன்று முடிவுகள் வெளியிட உள்ள முக்கிய நிறுவனங்கள்:
State Bank of India (SBI)
Avenue Supermarts (DMart)
Kotak Mahindra Bank
Indian Bank
D-Link India
Agri-Tech (India)
Dhruva Capital Services
Odyssey Technologies
Surana Solar
Hemadri Cements
Utkarsh Small Finance Bank
Vardhman Textiles
Medinova Diagnostic Services
Netweb Technologies
Xelpmoc Design & Tech
Solarium Green Energy
Gawara Leasing & Finance
Deccan Bearings
Privy Specialty Chemicals
Sunrise Industrial Traders
Swojas Foods
Others
SBI Q4FY25 முடிவுகள் எப்படி இருக்கும்?
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ (SBI), 2025 மார்ச் 31 முடிவடைந்த காலாண்டில் நிகர லாபத்தில் 10% முதல் 15% வரை சரிவை எதிர்நோக்குகிறது.
ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, SBI-யின் நிகர லாபம் ரூ.18,106 கோடி ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ.20,698 கோடியில் இருந்து சுமார் 12.5% குறைவாகும் இருக்கலாம்.
அதே நேரத்தில், நிகர வட்டி வருமானம் (Net Interest Income – NII) ரூ.41,655 கோடியில் இருந்து 2.5% அதிகரித்து ரூ.42,696 கோடியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


