செய்திகள்
மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய விதி மாற்றங்கள் – பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், பல முக்கிய நிதி மற்றும் பொருளாதார விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் நம்முடைய அன்றாட வாழ்க்கை, நிதி பரிவர்த்தனை, முதலீடுகள் மற்றும் வங்கி சேவைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்:
1. LPG சிலிண்டர் விலை மாற்றம்
- ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன.
- மார்ச் 1, 2025 அன்று வீட்டு மற்றும் வணிக LPG சிலிண்டர் விலை மாற்றப்படும்.
- விலை உயர்வு அல்லது குறைப்பு மக்கள் செலவினங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
2. மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு
- மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு அமலுக்கு வரலாம்.
- தனியார் நிறுவன ஊழியர்களும் இதன் தாக்கத்தைக் காணலாம்.
3. இயற்கை எரிவாயு மற்றும் ATF விலை மாற்றம்
- CNG, PNG மற்றும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலை மாதத்தோறும் மாற்றப்படும்.
- விலைகள் உயந்தால், பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு செலவு அதிகரிக்க வாய்ப்பு.
4. UPI பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றம்
- மார்ச் 1 முதல், IRDAI விதிகள் மூலம் UPI வழியாக காப்பீட்டு பிரீமியம் செலுத்துவது எளிதாகும்.
- டிஜிட்டல் பரிவர்த்தனை மேலும் வசதியாகும்.
5. FD வட்டி விகிதம் & வரி விதிகளில் மாற்றம்
- நிலையான வைப்புத் தொகை (FD) வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
- 5 ஆண்டுகளுக்குள் FD வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் தாக்கம் ஏற்படும்.
- FD வரி விலக்கு விதிகளும் மாற்றப்படும்.
6. மியூச்சுவல் ஃபண்ட் & டீமேட் கணக்கு விதிகள்
- SEBI புதிய விதிகளின்படி, டீமேட் கணக்கில் அதிகபட்சம் 10 நாமினிகளை சேர்க்கலாம்.
- முதலீட்டு பாதுகாப்பு அதிகரிக்கும்.
7. EPFO & UAN இணைப்பு கடைசி தேதி
- மார்ச் 15, 2025க்குள் UAN (Universal Account Number) ஆனது ஆதார் & வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்.
- UAN ஆக்டிவேட் செய்யாதால், ஊழியர்கள் EPFO நன்மைகளை பெற முடியாது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















