சினிமா
96, ராட்சசன் படங்களை பாராட்டிய 2.0 இயக்குநர்!
Published
4 years agoon
By
seithichurul
விஜய்சேதுபதியின் 96 மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 4ஆம் தேதி வெளியாகிய 96 படத்திற்குரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும்இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் படத்தைகொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோத்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்புஇருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவைபாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
`96, ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது. அதுவே இந்த படத்தின்அழகு. விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பு. திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள். ராட்சசன், மற்றொரு சுவாரஸ்யமான படம். ரசிகர்கள் இயக்குநர்ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அது அவருக்கேஉரியதாகும்’ என ஷங்கர் பாராட்டியுள்ளார்.