இந்தியா
மகராஷ்டிராவில் ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவின் மொத்த மதிப்பில் 50% மேலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 155 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மும்பயில் மட்டும் 10 ஆயிரத்துக்கு அதிகமானோர்களும், புனேவில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது., மும்பை புனே நாக்பூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சருக்கு மாநில அமைச்சர் தகவல் அளித்து இருப்பதாகவும் விரைவில் ஆக்ஸிஜனுக்கு ஏற்பாடு செய்யும் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மகாராஷ்டிராவில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறு முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















