இந்தியா
அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பெயரில் மிரட்டல் மெயில்: சி.ஆர்.பி.எப். அதிர்ச்சி

மும்பையில் உள்ள மத்திய ரிசர்வ் படை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயரில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை சிஆர்பிஎஃப் டிஜிபி செய்தியாளர்களிடம் கூறியபோது ’எங்களுக்கு வந்த மிரட்டல் மெயிலை மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசின் தொடர்புடைய அமைப்புகளுக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் அந்த இமெயில் குறித்து அவர்கள் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் அவர்கள் அறிவுரையின்படி நாங்கள் பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் சிஆர்பிஎஃப் ஈடுபட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான நக்சலைட்களும், பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நக்சலைட்டுகளை ஒழிக்க தீவிரமாக மத்திய அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில் மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சரின் பெயரிலேயே சிஆர்பிஎஃப் அமைப்புக்கு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















