இந்தியா
4 மணி வரை நாட்டுநடப்புகள் 01.12.2025

- செங்கல்பட்டுதிருப்போரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் வொண்டர் லா பொழுதுபோக்கு பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..
- கவர்னர்கள்தங்கும் ராஜ்பவன் கட்டிடத்திற்கு லோக்பவன் என பேயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவில்ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் உடலோடு காதலி திருமணம் செய்து கொண்ட காட்சிகள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
- ஒடிசாவில்இந்திய அரசியல் சாசனத்தின் பெயரில் உறுதிமொழி ஏற்று ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
- ராணிப்பேட்டைமாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை கோயிலில் திருமணம் செய்து கொண்ட சில நிமிடங்களில் இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள குளத்திற்கு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கையைநிலைகுலைந்து செய்த மழை வெள்ளத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 330 ஐ தாண்டியது.
- .உபேர்போக்குவரத்து நிறுவனம் 13 முதல் 17 வயது வரை உள்ள டீன்ஏஜர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 37 நகரங்களில் எளிய பாதுகாப்பான பயணங்களை இது உறுதி செய்கிறது.
- பெங்களூருவைச்சேர்ந்த ஒரு தனியார் நிறுவன சிஇஓ தனது நிறுவனத்தின் செலவுக் குறைப்புக்கான ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலை இழக்க உள்ள 70 பணியாளர்களுக்கு 3 மாத நோட்டீஸ், வேறு வேலைக்கான தகவல்கள் ஆகியவற்றை அளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
- நடிகைசமந்தா தான் காதலித்து வந்த இயக்குநர் ராஜ்நிதிமோருவை 2வது திருமணம் செய்துகொண்டார்.
- கரூர்சம்பவத்தை தொடர்ந்து சிவகங்கை திருப்பத்தூர் பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.2 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
- எடப்பாடிபெரிய தலைவர் அல்ல… தவெக செங்கோட்டையன்…
- சென்னையில்இன்று காலையிலிருந்து வெளுத்து வாங்கும் கனமழை..
- நாடாளுமன்றமக்களவை இன்று காலையில் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் மற்றும் அமளியால் நாளை காலை வரை ஒத்திவைப்பு.
