Connect with us

செய்திகள்

இன்றைய செய்தித் துளிகள் 01.12.2025

Published

on

  • நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முதல் 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
  • கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாரதம் தேர் பவனி நடைபெற்றது.
  • தென்ஆப்பிரிக்காவுடனான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 17 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.
  • சென்னையில் இன்று உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் தொடங்க இருக்கின்றன.
  • சென்னையில் நேற்று நடந்த உலகக்கோப்பை ஜீனியர் ஆக்கிப் போட்டியில் ஜப்பான் வென்றது.
  • இலங்கையில் டிட்வா புயலின் கோரத்தாண்டவத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • டிட்வா புயல் வலுவிழந்ததால் வடதமிழ்நாட்டில் மழை குறைந்தது.
  • உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு புகழ்பெற்ற சந்தனம் புசும் வைபவத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து நீண்ட நேரம் காத்திருந்து தொழுகை நடத்தினார்.
  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி.
  • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையில் பார்போடு குறியீட்டுடன் அடையாள அட்டை அணிவிக்கப்படுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Fast & mobile ready :.