உலகம்
2025 புத்தாண்டு: வெளிநாடுகளில் அசாதாரணமான கொண்டாட்டங்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
2025 புத்தாண்டை உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மக்கள், டிசம்பர் 31 ஆம் தேதி இரவு விமர்சியாகக் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வித்தியாசமானதாக அமைகின்றன.
இந்தியாவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் பார்ட்டிகள், சினிமா பார்வை, மற்றும் வழிபாட்டு தலங்களுக்குச் செல்வது போன்றவை ஆகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உணவு உண்ணுவது முக்கியமான நடைமுறையாக உள்ளது.
தென் அமெரிக்கா நாட்டில் ஒரு வினோதமான பழக்கம் காணப்படுகிறது. அங்கு மக்கள் காலியான சூட்கேஸ்களை எடுத்துச் சென்று நடப்பர். இது அந்த ஆண்டில் சாகசங்களால் நிறைந்த வாழ்க்கையை வழங்கும் என நம்புகிறார்கள்.

டென்மார்க்கில், புத்தாண்டன்று வீட்டின் கதவை திறந்தவுடன் உடைந்த தட்டை காண்பது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. நண்பர்களின் வீட்டு வாசலுக்கு சென்று தட்டுகளை உடைத்துவிட்டு வருவது வழக்கமாக உள்ளது.
ஸ்பெயினில், புத்தாண்டு நள்ளிரவில் திராட்சை உண்ணும் நடைமுறை உள்ளது. இதனால் அடுத்த 12 மாதங்கள் அதிர்ஷ்டம் இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.
ருமேனியாவில், புத்தாண்டன்று மக்கள் கரடியை போல வேடமணிந்து நடனம் ஆடுவதை வழக்கமாகக் கடைப்பிடிக்கின்றனர். இதனால் தீய சக்திகள் நீங்கும் என நம்புகிறார்கள்.
தென் ஆப்ரிக்காவில், பழைய பொருட்களை ஜன்னலின் வழியே தூக்கி எறிந்து புத்தாண்டை வரவேற்கின்றனர். குறிப்பாக பழைய நாற்காலிகளை வீசுவது அங்கு பொதுவான நடைமுறையாக உள்ளது.
இந்த வினோதமான புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாடுகளின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கின்றன. 2025 ஆம் ஆண்டின் புதிய அனுபவங்களுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் நாம் அனைவரும் காத்திருக்கலாம்!
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















