செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை – உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால், சில உத்தரவுகளை இட்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு தவனை டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை,
பிரபலங்கள் பொது இடங்களில் பங்கேற்கக் கூடாது, தனி இடங்களில் பங்கேற்கக் கூடாது…
தங்கும் விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தங்கிக் கொள்ளலாம்
மதுபானக்கடைகள், பார்கள், விடுதிகள் என எந்த இடத்திலும் மதுபான விற்பனை கூடாது, அதேபோல், பொது இடங்களில் மது அருந்தக்கூடாது
என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







