இந்தியா
2023 ஆம் ஆண்டின் நீட் தேர்வு, ஜே.ஈ.ஈ. தேர்வு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Published
2 months agoon
By
Shiva
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் நாடு முழுவதும் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு என்ற கனவு நினைவாகும் என்பதால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பதும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பல ஏழை எளிய மாணவர்கள் கூட மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. தமிழகம் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களில் நீட் தேர்வு ஏற்றுக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டில் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு நீட் தேர்வு மே 7-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜே.ஈ.ஈ மெயின் முதல்கட்ட தேர்வு ஜனவரி மாதம் 24ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியும் நடைபெறும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான பொது பல்கலைகழக நுழைவுத் தேர்வான CUET தேர்வு மே மாதம் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த தேர்வானது ஜூன் 1 முதல் 7 வரை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
You may like
-
முதல்முறையாக நீட் தேர்வு எழுத போகிறீர்களா? இதையெல்லாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்!
-
தமிழகத்தில் மட்டுமல்ல.. பீகாரிலும் நீட் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை முயற்சி: அதிர்ச்சி சம்பவம்
-
75% மதிப்பெண்களை பெறாத மாணவர்கள் ஜே.ஈ.ஈ தேர்வை எழுத முடியுமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்
-
படிப்பை முடிக்கும் முன்பே கோடிகளில் வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை!
-
10ஆம் வகுப்பில் பாஸ் செய்தால் விமான பயணம்.. சொந்த காசை செலவு செய்யும் ஆசிரியர்!
-
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வளவு கட்டணம்? கடைசி தேதி என்ன?