இந்தியா
பிரியாணி தான் நம்பர் 1.. 2022ஆம் ஆண்டு ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்!
Published
2 months agoon
By
Shiva
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரியாணி என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும் நிலையில் 2022ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகை எது என்பது குறித்த ஸ்விக்கி பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது என்று ஸ்விக்கி கூறுகிறது. இந்த ஆண்டு மட்டுமின்றி கடந்த 7 ஆண்டுகளாக பிரியாணி தான் முதலிடத்தில் உள்ளது என்றும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 137 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாகவும் அதாவது ஒரு நொடிக்கு சுமார் 3 பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரியாணியை அடுத்து அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகை மசாலா தோசை என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. அதேபோல் தின்பண்டங்களை பொருத்தவரை 2022ஆம் ஆண்டில் சமோசா அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டதாகவும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் சமோசா ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் சமோசாவை அடுத்து அதிகமாக விற்பனையான தின்பண்டங்கள் என்றால் அது பாப்கான் என்றும் பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிக பாப்கான் ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் மக்களின் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்றாக குலோப்ஜாமுன் இருக்கிறது என்றும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 27 இலட்சம் குலோப்ஜாமுன் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
You may like
-
ஸ்விக்கியில் சானிடரி பேட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்.. வைரல் டுவிட்!
-
மும்பை போதை பெண் ஆர்டர் செய்த பிரியாணி ரூ.2500ஆ? என்ன நடந்த்து?
-
ஒரே கல்லில் 3 மாங்காய்.. ஒரே நேரத்தில் ஸ்விக்கி, டன்சோ, ரேபிடோவில் வேலை பார்க்கும் சென்னை இளைஞர்!
-
ஜொமைட்டோவில் ரூ.28 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்த இளைஞர்.. வீட்டில சமைக்கறதே இல்லையா?
-
ட்ரோன்கள் மூலம் டெலிவரி: சென்னை நிறுவனத்துடன் ஸ்விக்கி ஒப்பந்தம்!
-
ஸ்விகியை கலாய்த்த சுப்மன் கில்.. வச்சி செய்த ஸ்விகி!