தமிழ்நாடு
18 எம்எல்ஏக்கள் வழக்கு.. முதல்வர் பழனிச்சாமி அவசர அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை

சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் அதிமுக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள நிலையில் ஆலோசனை நடக்கிறது. அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் தங்கியுள்ள நிலையில் ஆலோசனை நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக்கு பின் முதல்வர் பேட்டியளிக்க வாய்ப்புள்ளது.

















