இந்தியா
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வீராங்கனைக்கு புத்தம் புதிய கார்: பிரபல நிறுவனத்தின் பரிசு..!

சமீபத்தில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த நிகத் ஜரீன் என்ற வீராங்கனைக்கு மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் புதிய எஸ்யூவி காரை பரிசாக அளித்துள்ளது
சமீபத்தில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன், வியட்நாம் வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்ச்சி சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ஒரு லட்சம் டாலர்கள் பரிசு கிடைத்துள்ள நிலையில் அந்த வீராங்கனையின் ஸ்பான்சர்களான மகேந்திரன் & மகேந்திரா நிறுவனம் புதிய காரை பரிசாக வழங்கியுள்ளது.

#image_title
இதுகுறித்து மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நிகத் ஜரீன் எழுதி உள்ளார் என்றும் வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு இது ஒரு உத்வேகமாக இருக்கும் என்றும் அவருடைய சாதனையை பாராட்டி புதிய காரை நாங்கள் பரிசாக அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், வாகனப் பிரிவுத் தலைவர் வீஜய் நக்ரா இதுகுறித்து கூறியபோது, ‘நாட்டில் பெண்கள் குத்துச்சண்டையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பாராட்டு விழாவின் மூலம், உலகில் வளர்ந்து வரும் விளையாட்டுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதன் மூலம், உலக அளவில் இந்தியாவுக்காக அதிக பாராட்டுகளை வெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது நாட்டிற்கு, ‘ரோட் டு கோல்ட்’ முயற்சி பல இளம் பெண்களை அவர்களின் கனவுகளைத் தொடர ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.