செய்திகள்
புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 மாத உதவித்தொகை – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
Published
1 வருடம் agoon
By
Poovizhi
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 மாத உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரி தவளக்குப்பத்தில் நடைபெற்ற இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி, மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசினார் அவர், “தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஆனால் விரைவில் புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, மக்கள் நலன் குறித்த பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படும் சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
