இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.12.2025

- ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம்தொடர்பாக பரிந்துரை செய்ய குழு அமைப்பு
- மழையால் பாதிக்கப்பட்டபயிர்களுக்கு 60 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ரூ.289.63 கோடி வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
- முதல் கட்டமாக 1000 ஒப்பந்தசெவிலியர்கள் பளி நிரந்தரம் செய்யப்படுவர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- ஒப்பந்தசெவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க நடவடிக்கை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- மத்திய கூட்டுறவுத்துறை விரைவில் பாரத் டாக்சி சேவையை தொடங்கும் – அமித்ஷா தகவல்
- இசைமுரசு நாகூர் அனீபாவின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு
- தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
- கேமராசெல்போன்களை பெண்கள் பயன்படுத்த தடை விதித்து கீபோர்ட் போன்களை பயன்படுத்தலாம். அதையும் வீட்டிற்குள்ளே மட்டும் பயன்படுத்த வேண்டும் என ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தின் 15 கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானம்
- Emergency locations Service (ELS)அவசர இருப்பிட நேவையை இந்தியாவில் அறிமுகப் படுத்தியது கூகுள். 112 என்ற அவசர எண்ணை டயல் செய்யும்போது தானாகவே அழைப்பாளரின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து அவசர மீட்பு சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளும்.
