இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.12.2025

- 2026 புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வாட்சப்பில் ஏபிகே ஃபைல்களுடன் வரும் மெசேஜ்களை பயனர்கள் ஓப்பன் செய்ய வேண்டாம். தகவல் திருட்டு பணம் திருட்டு நடைபெற வாய்ப்பு
- உலக வங்கியின் அங்கீகாரம் – சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதை வென்று சாதனை படைத்த சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
- சிங்கப்புரில் தற்போது நிலவி வரும் கடும் ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க மனிதவள அமைச்சகம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் விதிகளில் முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை எளிதாக பணியமர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து கிராம் ரூ.12550க்கும் சவரன் ரூ.100400க்கும் விற்பனை ஆகிறது.
- வெள்ளி விலையில் நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமுமில்லை.
- மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் – டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் லிப்ட் தருவதாகக் கூறி 28 வயது பெண்ணை வேனில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிய கொடூரம்.
- நாடு முழுதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி விட்டது.
BHOOMI TODAY
வாசகர்களுக்கு எங்கள் குழுவினரின் இதயங் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
