இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 31.12.2025

- முதன் முறையாக இந்தி மற்றும் உருது மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் ஐ.நா. பொதுச் செயலாளர்.
- புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் – தமிழ்நாடு காவல்துறை
- ஜி மெயில் முகவரியை மாற்ற முடியாது என்ற நீண்ட கால விதியை கூகுள் மாற்றியுள்ளது. புதிய அப்டேட் படி உங்கள் டேட்ாக்கள் மாறாமல் 3 முறை வரை ஐடியை மாற்றிக் கொள்ளலாம். பழைய ஐடி “அலியஸ்“ முகவரியாகச் செயல்படும்.
- கடந்த புதன்கிழமை ஐ.நா. அவையில் நடந்த வாக்கெடுப்பில் கஞ்சாவை ஆபத்து விளைவிக்கும் போதை பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய இந்தியா அமெரிக்கா மறறும் 27 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
- மென் பொருள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் அரசு இ-சேவை மையங்கள் இயங்காது.
- வாக்யும் அசிஸ்ட் டிராக் க்ளீனர் என்ற இயற்திரம் இரயில் தண்டவாளங்கள் மற்றும் பக்கவாட்டிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் காகித குப்பைகளை அகற்ற சோதனை முறையில் பயன்படுத்தி வெற்றி காணப்பட்டுள்ளது.
- உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்த நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டும் வேளையில் ரஷ்யா பெலாரஸ் நாட்டில் நிறுத்தி வைக்கப்படடுள்ள ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை சோதனை செய்ய தொடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க முடிவெடுத்துள்ள நிலையில் பரபரப்பு.













