இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.01.2026

- கியுபா விவகாரத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
- வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடு உடைமைகளை இழந்த 555 பேரின் வங்கிக் கடன்களாக ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே திரும்பச் செலுத்த உள்ளது. ஒன்றிய அரசு மறுத்த நிலையில் மாநில அரசே செலுத்த உள்ளது.
- ஜனநாயகன் பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது தணிக்கை வாரியம்.
- தூய்மை பணியாளர் பத்மா கண்டெடுத்த 45 சவரன் நகைகளை நேர்மையுடன் ஒப்படைத்ததைப் பாராட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
- சென்னையில் அணைத்து மாடுகளுக்கும் உரிமம் மற்றும் மைக்ரோசிப் கட்டாயம் என சென்னை மாநகராட்சி உத்தரவு.
- இன்று ஒரே நாளில் தங்கமும் வெள்ளியும் இரண்டு முறை விலை வீழ்ச்சி அடைந்தது.
- இப்போதைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 குறைந்து கிராம் ரூ.15850க்கும் சவரன் ரூ.126800க்கும் விற்பனை ஆகிறது.
- இப்போதைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.405க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.405000க்கும் விற்பனை ஆகிறது
