செய்திகள்
தமிழ்நாட்டில் நாளை (ஜனவரி 31) மின்தடை: சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, வேலூர், புதுக்கோட்டையில் பாதிக்கப்படும் பகுதிகள்!

தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜனவரி 31 (சனிக்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் அறிவிப்பின்படி, வழக்கமான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் இந்த மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில், மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் விவரங்களை இங்கு காணலாம்.
📍 ஈரோடு
எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேலும் சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம் பகுதிகளும் பாதிக்கப்படும்.
📍 புதுக்கோட்டை
சிப்காட் முழுப் பகுதி, தனாலூர் பகுதி முழுவதும், அன்னவாசல் நுழைவாயில் பகுதி மற்றும் அன்னப்பனை பகுதி முழுவதும் மின்தடை செய்யப்படும்.
📍 கோயம்புத்தூர்
குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
மேலும் அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம், ரேஸ் கோர்ஸ், ராம்நகர், சாய்பாபா காலனி, சிவானந்தா உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் பாதிக்கப்படும்.
📍 சென்னை
ராமாபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், மவுண்ட் – பூந்தமல்லி சாலை, வள்ளுவர் சாலை, ராமமூர்த்தி அவென்யூ, ஐபிஎஸ் காலனி, மாம்பாக்கம், செங்கணவரன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
📍 வேலூர்
தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், போகை, காந்தி சாலை, ஆபிசர்ஸ் லைன், ஓல்ட் டவுன், வேலூர் பஜார் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான மின் சாதனங்களை பயன்படுத்தி முடித்துக் கொள்ளவும், மின்தடை நேரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


