Connect with us

இந்தியா

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தைக் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

Published

on

இன்று காலை தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநில சுயாட்சி தீர்மானத்தை வாசித்தார்.

இந்த தீர்மான முன்வடிவின் சில முக்கிய பகுதிகள் உங்களுக்காக இதோ!…

நம் இந்திய நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்து விட்டது. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதைப் பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன. இத்தனை வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.

நம் நாட்டு மக்களின் நலன்களைப் போற்றிப் பாதுகாக்கின்ற வகையில் அதற்கான அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும், அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தலைமையில் உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சிக் கருத்தியலை, நெறிமுறைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள்.

இப்படி அமைக்கப்பட்ட மாநிலங்கள் அணைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும். இந்தியாவும் வலிமை பெறும். இதனை உணர்ந்து, “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி“ என்கிற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கி வருகிறது.

நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களையும், உயர்தர மருத்துவமனைகளையும், முன்னனி மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டில் தரமான கல்வி கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வு மூலம் பொதுக்கல்வி முறையை சிதைப்பதையே நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இதேபோல் ,மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020 ன் மூலம் மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை ஒன்றிய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்க முற்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை வஞ்சித்து வருகிறது.

எனவே, மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதிசெய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாததாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் அறிமுக நிலையிலேயே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்த மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. எனினும், பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களின் கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதனால், உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயற்கை சீற்றங்களினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதெல்லாம் கூட, உரிய இழப்பீடுகள், தகுந்த ஆய்வு மற்றும் அளவீடுகள் செய்த பின்னரும் பலமுறை வலியுறுத்தியும் வழங்கப்படவே இல்லை.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி மாநில அரசின் தீவிர மக்கள்தொகை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிறப்பு விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்ட நிலையில் அதனை தண்டிக்கும் விதமாக 2026 ம் ஆண்டு நடைமுறைப்படுத்த கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறையினால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்டக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய திருநாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் நிறைவேற்றிடத் தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில், கூட்டாட்சிக் கருத்தியலை வலயுறுத்துவது இன்றியமையாததாகிறது.

மாநிலங்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு மற்றம் நிதிப் பகிர்வு நாம் வலயுறுத்துவது தமிழ்நாட்டின் நலன் கருதி மட்டுமல்ல. அணைத்து மாநிலங்களின் நலன் கருதியே நாம் நம்முடைய வாதங்களை முன்வைக்கிறோம். மாநில சுயாட்சி குறித்த விவாதங்களில் முதல் குரல் என்றுமே தமிழ்நாட்டில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும்.

இவ்வாறாக பேசி மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.  இத்தீர்மானத்தின் மீதான விவாதங்களில் பங்கேற்காமல் அதிமுகவும், பாஜகவும் வெளிநடப்பு செய்து விட்டன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Clay vs concrete roof tiles : complete comparison for cost, durability & style commercial & residential roof contractor clark roofing.