இந்தியா
டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 22.12.2025

- இன்று ஒரே நாளில் தங்கம் இரண்டு முறை விலையேற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12570க்கும் ஒரு சவரன் ரூ.100560க்கும் விற்பனை ஆகிறது.
- சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி ஜனவரி 15 முதல் 18 வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
- தவெக தலைவர் விஜயை அரசியல் தலைவராக ஏற்க மாட்டேன் – நடிகர் சரத்குமார்
- அஜீத் கார்ரேஸ் தொடர்பான ஆவணப்படத்தின் டீசர் வெளியானது.
- கொரோனா காலத்தில் பணியாற்றிய 724 செவிலியர்களுக்கு விரைவில் தொகுப்புதிய பணி வழங்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி.
- வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 92626 பேர் மனு கொடுத்துள்ளனர் – தலைமை தேர்தல் அதிகாரி
- மாமல்லபுரம் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தில் திமுக அரசு சிறந்து விளங்குவதாக பாராட்டி பேசினார்
- சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா நடித்த பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது என அறிவிப்பு.
- அருணாச்சலபிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி.
- சிலாய்கலன் எனப்படும் 41 நாள் கடும் பனிக்காலம் ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் அணைத்து அரசு பள்ளி கல்லூரிகளிலும் தினந்தோறும் பகவத்கீதை வாசிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
- ஆதித்ய தர் இயக்கிய இந்தி திரைப்படம் துரந்தர் வசூலை வாரிக் குவித்து வருகிறது. 15 நாளில் 500 கோடி வசூல்.
