Connect with us

இந்தியா

வாயைத் திறந்து தூங்குவது ஆபத்தா?…

Published

on

தூங்கும் போது உங்கள்வாய் திறந்தே இருக்கிறதா? யாராவது உங்களிடம் “நீ தூங்கும் போது வாயைத் திறந்து வைத்திருப்பாய்“ என சொன்னதுண்டா? அப்படியானால் அதற்குக் காரணம் என்ன? அது எதைக் குறிக்கிறது? இது ஏதேனும் உடல் அபாயங்களை சுட்டிக் காட்டுகிறதா?

இதைப் பற்றித்தான் இன்னைக்கு பார்க்கப் போறோம்..

தூக்கத்தில்நாம் மூக்கு வழியாக சுவாசிக்கிறோம் நிம்மதியான நிலையில் இருப்பதால் வேகமாக சுவாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் தூங்கும் போது பல பேருடைய வாய் திறந்தே இருக்கும். அப்போது அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்.

பலநேரங்களில் கடினமான வேலைகளைச் செய்யும்போது மக்களுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படும். இதற்காக அவர்கள் மூக்கு மட்டுமில்லாமல் வாய் வழியாகவும் சுவாசிக்கிறார்கள். ஓடும்போது அல்லது விளையாட்டுகளில் ஈடுபடும்போது மக்கள் வாய் வழியாக மூச்சு விடுவதைக் காணலாம்.

உண்மையில் நாள்பட்ட வாய் சுவாசம் தூக்கத்தில் மூச்சுத் திணறலின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும்.

இதற்கு மருத்துவர்கள் தரும் விளக்கத்தை பார்ப்போமா…

வாயைத் திறந்து கொண்டே தூங்குவது எந்த நோயின் அறிகுறியும் இல்லை. மூக்கில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலோ அடைப்பிருந்தாலோ இவ்வாறு நடக்கும்.

மூக்கடைப்புக்கு பொதுவான காரணம்கடுமையான சளி. ஆனால் சில சமயங்களில் டான்சில் பெரியதாக ஆவதால் மூக்கடைப்பு ஏற்படுகிறது.  வயது ஏற ஏற டான்சில் சிறிதாகி இந்தப் பழக்கம் மெல்ல மறைந்துவிடும்.

செப்டம் குருத்தெலும்புநாசி குழியை இரண்டு பகுதிகளாக பிரிக்கிறது. இந்த எலும்பு இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும். ஆனால் அது அதிகமாக வளைந்தால் மூக்கின் ஒரு பகுதி அடைபடுகிறது. இதனால் விலகிய நாசி செப்டத்தின் காரணமாக மக்கள் வாய் வழியாக சுவாசிக்கத் தொடங்குகிறார்கள். இது தீவிரமானால் செப்டோ பிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை மூலம் இதைச் சரி செய்யலாம்.

ஆனால் தூங்கும்போதுவாயைத் திறந்து வைத்திருந்தால் சுவாசம் சத்தமாக இருந்தாலோ அல்லது குறட்டை விடுவதாக இருந்தாலோ உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

வாய்வழியாக சுவாசிப்பது வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது வாய் சுகாதாரத்தையும் பாதிக்கலாம்.

ஒருவருக்கு இருமல்சளி அல்லது வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் வாய் திறந்து தூங்கினால் முதலில் காது மூக்கு தொண்டை பரிசோதனை செய்ய வேண்டும்.

குழந்தைகளின்உடற்கூறியல் மற்றும் உடலியல் தனித்துவமானது என்பதால் இரவு நேர வாய் சுவாசத்தின் அறிகுறிகள் குழற்தைகள் மற்றும் பெரியவரிகளிடம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

பெரியவர்களுக்கான அறிகுறிகள்

வறண்ட வாய், தொண்டை வலி,மோசமான வாய்வழி ஆரோக்கியம் (ஈறு நோய் மற்றம் பல்சிதைவு நோய் வாய்துர்நாற்றம் குறட்டை குறிப்பாக உங்கள் படுக்கை துணையை எழுப்பும் அளவுக்கு சத்தமாக குறட்டை விட்டால் அது நோயின் அறிகுறி.

இந்த குறட்டையினாலேயே விவாகரத்து வரை சென்ற குடும்பங்களும் உ்ண்டு.

இதுதவிர காலை எழுந்ததும் தலைவலி, இரவு தூக்கமின்மையால் பகல் நேரத் தூக்கம் கவனம், செலுத்துவதில் சிரமம் ஆகியவையும் அறிகுறிகளாகும்.

வாயைத்திறந்து தூங்கும் நோயாளிகள் இரவில் நன்றாக தூங்கியதாக நினைத்தாலும் காலையில் சோர்வாகவே எழுந்திருப்பார்கள்.

இதனால் தூக்கத்தின் தரம் குறைந்து ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் பாதிக்கப் படுகிறது.

குழந்தைகளுக்கான அறிகுறிகள்

கவனம் செலுத்துவதில் சிக்கல், இயல்பைவிட மெதுவான வளர்ச்சி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமம், அதிகப்படியான சோர்வு, வறண்ட வாய் மற்றும் பல் சிதைவு உள்ளிட்ட வாய்வழி சுகாதார சிக்கல்கள் அறிகுறிகளாகும். உடனே குழந்தைகளை பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

நோயாளிகள் தங்கள் வாய்வழியாகசுவாசிக்கும்போது அது வாயில் உள்ள உமிழ்நீரை உலர்த்துகிறது. பல் சிதைவை மாற்றியமைக்க உதவும் தாதுக்கள் இதில் உள்ளன. என்கின்றனர் மருத்துவர்கள்.

இதன் காரணமாக இருதய நோய், வகை 2 நீரிழிவு நோய் அறிவாற்றல் குறைவு மற்றும் பிற கடுமையான நாள்பட்ட உடல்நல தொந்தரவுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

குழந்தைகளோ பெரியவர்களோ இந்த சிரமம் இருந்தால் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு உங்கள் உடல் நலத்தை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை நலத்தையும் காத்துக் கொள்வது நல்லது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Maximize sales conversions while benefiting from high authority domain rankings and zero monthly subscriptions..