இந்தியா
இந்திய அளவில் 5149 அரசுப் பள்ளிகள் மாணவர்கள் இல்லாமல் பூத் பங்களாக்களாக உள்ளன.

இந்தியாவில் மொத்தம் 10 லட்சத்து 13 ஆயிரம் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 70 சதவீத பள்ளிகள் ஒரு மாணவர் சேர்க்கைக் கூட இல்லாமலோ அல்லது பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டே இயங்கி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வலம் வருகின்றன.
65054 பள்ளிகள் 10க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த பள்ளிகளில் 1.4 லட்சம் ஆசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
முறையான திட்டம், சரியான தரம் மற்றும் நிர்வாகம் ஆகியன இல்லாததே இந்த தோல்விகளுக்கு காரணமாக அமைகின்றன.
இந்திய அளவில் 100 மாவட்டங்களில் ஒரு மாணவர் சேர்கைக் கூட இல்லாமலோ அல்லது 10க்கும் குறைவான மாணவர்களுடனோ உள்ளன. இவற்றில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 33 மாவட்டங்களும் மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டும் 22 மாவட்டங்களும் இத்தகைய பள்ளிகளைக் கொண்டுள்ளன.
10க்கும் குறைவான மாணவர்கள் அல்லது மாணவர்களே இல்லாத பள்ளிகள்
மாநிலம் பள்ளிகளின் எண்ணிக்கை பணிபுரியும் ஆசிரியர்கள்
மேற்கு வங்காளம் 6703 27348
உத்தரபிரதேசம் 6561 22166
மகாராஷ்டிரா 6552 11056
ராஜஸ்தான் 5235 11620
தெலுங்கானா 5021 4850
தெலுங்கானாவின் மிக மோசமான மாவட்டங்கள்
நல்கொண்டா – 315 பள்ளிகள்
மகாபுபுபாத் – 167 பள்ளிகள்
வாரங்கல் – 135 பள்ளிகள்
ரங்கா ரெட்டி – 99 பள்ளிகள்
சித்திப்பெட் – 84 பள்ளிகள்
நாகர்கர்நூல் – 81 பள்ளிகள்
மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வரும் மாநிலங்கள்
கேரளா – 228 பள்ளிகள்
கோவா – 110 பள்ளிகள்
டெல்லி – 11 பள்ளிகள்
சிக்கிம் – 131 பள்ளிகள்
பஞ்சாப் – 372 பள்ளிகள்
புதுச்சேரி – 2 பள்ளிகள்
மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தாலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதற்குக் காரணம்
- குழற்தைகளின் பெற்றோர்கள்தனியார் பள்ளிகளில் உள்ள வசதி வாய்ப்புகளை நாடிச் செல்வது
- பள்ளிகள்போதுமான வசதி இல்லாத அல்லது மிகவும் சிறிய கட்டிடங்களைக் கொண்டிருப்பது
- மாணவர்சேர்க்கை குறைவான பள்ளிகளை மூட எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் காரணமாக அவற்றை அதே நிலையில் தொடர்ந்து பராமரிப்பது
- பெற்றோர்கள் குடும்பத்துடன் இடம் வி்ட்டுஇடம் பெயர்ந்து பிழைக்க செல்லுதல்
- அதிக தூரம் நடங்துசெல்ல வேண்டிய நிலை
- மிக அதிகமானஇடைநிற்றல்கள்
இத்தகைய சூழ்நிலைகளில்மக்கள் குறைவாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் மலைப் பகுதிகள் ஆகிய இடங்களில் தொடர்ந்து அரசுப் பள்ளிகளை நடத்துவது என்பது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது. மேலும் இத்தகைய பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டுவது பழுது பார்ப்பது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகள் இதர பராமரிப்பு செலவினங்கள் என தொடர்ந்து அரசுகள் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இதற்கு அரசுகள் இந்த நிலைமைகளை களைய திறமையான ஆய்வுக் குழுக்களை வைத்து குறைகளைக் கண்டறிந்து அந்த குறைகளை நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்பதே அணைவரின் எதிர்பார்ப்பு
