Connect with us

இந்தியா

ஓவர்நைட்டில் திவாலான 44 வெள்ளி வியாபாரிகள்.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..! ஷார்ட் செல்லிங் பகீர்…

Published

on

உலகளாவிய வெள்ளி விலை உயர்வு இந்தியாவின் உள்ளூர் சந்தைகளை பெரிதும்  பாதித்துள்ளது.  குஜராத்தின் ராஜ்கோட் நகரத்தில் உள்ள வெள்ளி வியாபார சந்தையில் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி குறித்து உள்ளூர் செய்தித்தாளான குஜராத் மிரர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வெள்ளி விலை அசாதாரண ஏற்றத்தை கண்டது எல்லோருக்கும் தெரியும். இந்த விலை உயர்வை பணமாக்கும் முயற்சியில் ராஜ்கோட் வெள்ளி வியாபாரிகள் தீவிரமாக  இறங்கினர்.

சர்வதசே சந்தையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2.5 லட்சம் வரை உயர்ந்தது, இந்த அதீத விலை உயர்வை அடிப்படையாக வைத்து ஷார்ட் செல்லிங் செய்த வியாபாரிகள் பெரும் சிக்கலில் சிக்கினர்.

வெள்ளியில் காலம் காலமாக வர்த்தகம் செய்யும் இந்த வியாபாரிகள் வெள்ளி விலை ரூ.1.25 லட்சத்தை தாண்டாது என்று நம்பி செல்லிங் பொசிஷன் செய்திருந்தனர். ஆனால் விலை தொடர்ந்து உயர்ந்ததால், விற்ற விலைக்கும் தற்போதைய சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்து, இதனால் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது தான் Short Squeeze.

ராஜ்கோட் வெள்ளி வியாபாரிகள் இத்தகைய வர்த்தகத்தை டப்பா டிரேடிங் முறையில் நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிப்பா டிரேடிங் என்பது மறைமுகமாக செய்யப்படும் வர்த்தகம்.

இந்த நிலையில் ராஜ்கோட் வியாபாரிகள் சனிக்கிழமை இரவு அவசர கூட்டம் நடத்தினர். இதில் 44 வியாபாரிகள் Short Squeeze இழப்பால் ஏற்பட்ட கடன்களை திருப்பி செலுத்த முடியாது என்று ஒப்புக்கொண்டனர். இதனால் திவாலாக அறிவிக்கப்பட்டது, இது குஜராத் புல்லியன் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என NDTV தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

சில வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. அதேசமயம்,  உலோகமாக வெள்ளி இருப்பு வைத்திருந்தவர்கள் அதிகப்படியான விலையால் லாபம் அடைந்துள்ளனர்.

கடன் அளவு

இப்படி ஷாட் செல்லிங் செய்தது மூலம் வெள்ளி வியாபாரிகளின் மொத்த கடன் தொகை ஏறத்தாழ ரூ.3,600 கோடியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ராஜ்கோட் மட்டுமின்றி அகமதாபாத், இந்தோர் மற்றும் துபாய் சந்தைகளையும் பாதித்துள்ளது. இந்த நெருக்கடி உள்ளூர் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி துறைகளையும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷார்ட் செல்லிங் என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?

பங்குச் சந்தையில் பெரும்பாலானோர் பங்குகளை வாங்கி, விலை உயர்ந்ததும் விற்று லாபம் ஈட்டுவார்கள். இதை “லாங் பொசிஷன்” என்று அழைப்பார்கள். ஆனால் சிலர் பங்கு விலை குறையும் என்று நினைத்து, அதிலிருந்து லாபம் ஈட்ட முயல்வார்கள். இந்த முறையைத்தான் ஷார்ட் செல்லிங் (Short Selling) என்று சொல்வார்கள். இது நடைமுறையில் இருக்கும் ஒரு வர்த்தக முறை தான், ஆனால் அதிக ஆபத்து உள்ளது, அதேவேளையில் சரியாக செய்தால் நல்ல லாபம் தரும்.

ஷார்ட் செல்லிங் எப்படி நடக்கிறது?

ஷார்ட் செல்லிங் செய்ய, உங்களிடம் பங்குகள் இருக்க வேண்டிய அவசியமில்லை.பிரோக்கர் (தரகர் நிறுவனம்) மூலம் பங்குகளை கடன் வாங்கி விற்பனை செய்வீர்கள். பிறகு விலை குறைந்ததும் அதே பங்குகளை வாங்கி, கடனை திருப்பி செலுத்துவீர்கள். இடையில் உள்ள விலை வித்தியாசம்தான் உங்கள் லாபம் அல்லது நஷ்டம்.

எளிய உதாரணம்:

ஒரு நிறுவனத்தின் பங்கு ஒன்று இப்போது ரூ.100க்கு விற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த பங்கு விலை குறையும் என்று நினைக்கிறீர்கள். அதனால்..  புரோக்கரிடம் 100 பங்குகளை short selling செய்ய கடன் வாங்குகிறீர்கள். அந்த 100 பங்குகளை சந்தையில் ரூ.100க்கு விற்கிறீர்கள். உங்கள் கணக்கில் ரூ.10,000 வருகிறது.

சில நாட்களுக்குப் பிறகு பங்கு விலை ரூ.80 ஆக குறைகிறது. நீங்கள் 100 பங்குகளை ரூ.80க்கு வாங்குகிறீர்கள் (ரூ.8,000 செலவு). கடன் வாங்கிய பங்குகளை புரோக்கருக்கு திருப்பி கொடுக்கிறீர்கள்.

உங்கள் லாபம்: ரூ.10,000 – ரூ.8,000 = ரூ.2,000 (புரோக்கர் கட்டணம் போக).

இதுதான் ஷார்ட் செல்லிங் செயல்முறை. இந்த வர்த்தக முறையில் விலை குறைந்தால் லாபம், விலை உயர்ந்தால் நஷ்டம். இதே பங்குகள் 120 ரூபாய் உயர்ந்தால் கடன் வாங்கிய 10000 + 2000 ரூபாயை ப்ரோக்கர்களுக்கு செலுத்த வேண்டும்.

இதேவர்த்தக முறையில் மறைமுகமாக வெள்ளி வர்த்தகர்கள் மத்தியில் ஷார்ட் செல்லிங் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விலை வியாபாரிகள் கணித்த 1.25 லட்சம் ரூபாய் காட்டிலும் 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இத்தகைய வர்த்தகத்தில் உருவான கடன் 3600 கோடி ரூபாயாக உயர்ந்து திவாலாக வைத்துள்ளது.

 

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Real estate consultant location coconut point residences. Best car transport companies. heavy equipment transport westmoreland pa.