இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 15.12.2025

- இந்தியா-மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் நடைபெற்றது.
- நீரிழிவு நோய்க்கான ஒசெம்பிக் மருந்து இந்தியாவில் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
- 15,16,17 தேதிகளில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி.
- 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுதியதாரர்கள் ஆதார் அட்டையை தங்களது வயதுக்கான சான்றாக அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- உலகை அச்சுறுத்த தொடங்கியிருக்கும H3N2 வைரஸ் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் காணப்படுகிறது. கோவிட் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் இந்த வைரஸ் சூப்பர் ஃப்ளு என அழைக்கப்படுகிறது.
- மும்பை வான்கடே மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியும் கிரிக்கெட் ஜாம்வான் டெண்டுல்கரும் இணைந்து ரசிகர்களை சந்தித்தனர்.
- சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2000 கோடி கடன் உதவி.
- மினி காஷ்மீராக மாறியது உறைபனியால் சூழப்பட்ட ஊட்டி சுற்றுலாத்தளம்.
- 1973ல் கொண்டுவரப்பட்ட பெரா சட்டத்தின் கீழான பழைய அன்னிய செலாவனி மோசடி வழக்குளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க அமலாக்கத்துறை முடிவு.
