இந்தியா
ஆன்லைனில் பணத்தை அனுப்பும் போது தவறாக அனுப்பி விட்டீர்களா? – பயப்பட வேண்டாம்

- இப்போதுள்ளடிஜிட்டல் இந்தியாவில் யுபிஐ ஆப்கள், ஜிபே, பேடிஎம் ஆகியவை மூலம் பணம் அனுப்புவதும் பெறுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. அப்படிஅனுப்பும் போது தவறாக அனுப்புவதால், போலியான லிங்ககுள் மூலம் பணம் அனுப்புதல் என இன்னும் பல வழிகளில் பணத்தை இழந்து விட வாய்ப்புகளிருக்கிறது.
- பணம் காசை பண்ணிலோ கையிலோபார்ப்பது என்பத அரிதாகிக் கொண்டே வருகிறது.
- கட்டணம்செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அணைத்தும் சில கிளிக்குகளில் உடனடியாக முடிந்து விடுகிறது. இதில் சில நேரங்களில் மொபைல் எண்ணை மாற்றி போட்டு வேறொருவருக்கு பணம் அனுப்பி விடுவதும் நடக்கிறது. ஆப்கள் மூலம் டெபிட் ஆகி விட்டால் அடுத்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பணம் தவறான நபருக்கு சென்று விடும். அதை கேன்சலோ அண்டு வோ செய்ய முடியாது என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
- ஆனால்அப்படி அசம்பாவிதமாக பணம் அனுப்பி விட்டால் அடுத்து நீங்கள் உடனடியாக செய்ய வெண்டிய ஸ்டெப்கள் என்னவென்று தெரியுமா?… வாருங்கள் பார்ப்போம்….
- பணம்யாருக்கு தவறாக சென்றதோ அந்த நபரிடம் ஒன்றுக்கு பலமுறை பேசி பாருங்கள். அவர் உங்களை புரிந்து கொண்டு பணத்தை திருப்பி அனுப்பி விட்டால் நல்லது. உங்களுக்கு உங்கள் பணம் கிடைத்தது என்று சந்தோஷமாக இருக்கலாம்.
- ஒருவேளைஅந்த நபர் மறுத்தால் அந்த ஆப் அல்லது இணையதளத்திலேயே உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி “ரிப்போர்ட்“ செய்யுங்கள்.
- அடுத்ததாக நடந்தவிஷயத்தை விளக்கமாக எழுதி உங்களது வங்கியிடமும் சென்னை பாரிமுனையில் உள்ள “பேங்கிங் ஆம்புட்ஸ்மேன்“ நிறுவனத்திடமும் புகார் அளியுங்கள். நேரில் செல்ல முடியாத போது இ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
- அப்போதும் உங்கள் பிரச்னை தீரவில்லைஎன்றால் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI – National Payments Corporation of India ) ‘Dispute Redressal Mechanism’ செல்லில் புகார் அளிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-120- 740 க்கு போன் செய்தும் புகார் அளிக்கலாம். உங்கள் பணத்தை மீண்டும் உங்கள் கைகளில் கொண்டு சேர்ப்பார்கள் .என்பிசிஐ சட்டத்தின்படி ஒரு மாத்திற்கு 10 முறை மட்டுமே தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற முடியும். ஒருவருக்கே திரும்ப திரும்ப தவறுதலாக பணம் அனுப்பினால் அதை 5 முறை மட்டுமே பெற முடியும்.
- எனவே இது போன்ற பணத்தை அனுப்பும் போது எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமாக கணக்கு எண்களை சரிபார்த்து பின்னரே பணம் அனுப்புவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். மேலும் இது தொடர்பாக அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை கவனமாக பார்த்து அவற்றின் படி செயல்படுங்கள்.
