Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 23.12.2025

Published

on

  • இன்றைய தங்கம் விலை கிராமிற்கு ரூ.200 உயர்ந்து கிராம் ரூ.12770க்கும் சவரன் ரூ.102160க்கும் விற்பனை ஆகிறது.
  • இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.234000க்கு விற்பனை ஆகிறது.
  • புதுச்சேரி போலி மருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றம்.
  • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் இன்று நூறாண்டுகளை முடித்திருக்கிறது.
  • அரசுசேவைகள் மற்றும் வங்கி வசதிகளைப் பெற ஆதார்-பான் இணைப்பு ஜனவரி 1 முதல் கட்டாயமாகிறது.
  • ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவைத் தொடர்ந்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கடுமையான விதிகளை கொண்டு வருவது குறித்து இந்திய அரச பரிசீலித்து வருகிறது.
  • 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 முதல் அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்புகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
  • புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நட்சத்திர விடுதிகளில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • 100 சதவீத வரிவிலக்குடன் இந்தியா நியுசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் – இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக அறிவிப்பு
  • எலான்மஸ்கின் ஸ்டார்லிங்கை அழிக்க ரஷ்யா ரகசிய அயுதம் தயாரிப்பு – விண்வெளியை நோக்கி நகரும் யுத்தம்
  • ப்ளஸ் 2  பொதுத் தேர்வு – அக மதிப்பீடு மதிப்பெண்கள் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
me profile.