இந்தியா
அதிர்ச்சித் தகவல் – கண்ணுக்குத் தெரியாத “ஒலி ஆயுதங்கள்”!

சமீபகாலமாக உலக நாடுகளின் ராணுவப் பயன்பாட்டில் உள்ள மிக ஆபத்தான தொழில்நுட்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஏவுகணையோ, துப்பாக்கியோ அல்ல; இது வெறும் “சத்தம்” மட்டுமே!
இந்த ஆயுதம் என்ன செய்யும்?
இந்த ஆயுதம் Directed Energy Weapon (DEW) அல்லது Sonic Weapon என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட திசையில் அதிதீவிர ஒலி அலைகளைப் பாய்ச்சும்.
காதில் ரீங்காரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காதுக்குள் ஏதோ ஒரு உலோகம் உரசும் சத்தம் அல்லது வண்டின் ரீங்காரம் கேட்பது போல் இருக்கும்.
மூளை பாதிப்பு இது நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மூளையில் ரத்தப் பெருக்கையோ (Brain Hemorrhage) அல்லது கடுமையான காயங்களையோ உண்டாக்கும்.
ரத்தப்போக்கு அதிகப்படியான அழுத்தத்தினால் காது, மூக்கு போன்ற துவாரங்கள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படக்கூடும்.
இதர பாதிப்புகள்- கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் பார்வை மங்குதல்.
வெனிசூலா மற்றும் ஹவானா சிண்ட்ரோம்
கியூபா மற்றும் வெனிசூலாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இதுபோன்ற விசித்திரமான “ஒலித் தாக்குதலுக்கு” உள்ளானதாகப் புகார்கள் எழுந்தன. இதை மருத்துவ உலகம் “ஹவானா சிண்ட்ரோம்” என்று அழைக்கிறது. ஆரம்பத்தில் இது ஒரு மர்மமாக இருந்தாலும், தற்போது இது போன்ற “மைக்ரோவேவ்” மற்றும் “சோனிக்” ஆயுதங்கள் ரகசியமாகப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏன் இது ஆபத்தானது?
இந்த ஆயுதம் எப்போது ஏவப்படுகிறது, எங்கிருந்து வருகிறது என்பது கண்ணுக்குத் தெரியாது. போர்க்களத்தில் மட்டுமல்லாமல், போராட்டக்காரர்களைக் கலைக்கவும், உளவுப் பிரிவினர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை முடக்கவும் இதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.
தொழில்நுட்பம் வளர வளர, ஆபத்துகளும் புதிய வடிவங்களில் வருகின்றன. விழிப்புணர்வுடன் இருப்போம்!


