Connect with us

ஆன்மீகம்

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

Published

on

பண்டைய பூம்புகார் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கிறது. அவற்றின் ஒரு சில எச்சங்கள் மட்டும் கடலுக்கு வெளியில் இருந்து பூம்புகாரின் பெருமை சொல்லிக் கொண்டிருக்கின்றன.அதில் சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும் இதில் முக்கியமானவை.

சீர்காழி – பூம்புகார் சாலையில் பூம்புகாருக்கு இரண்டு கிமி தொலைவில் முன்னால் உள்ளது சாயாவனம். இங்குள்ள சாய்க்காடுடையார் திருக்கோயிலுக்கு தென்புறம் சம்பாபதி அம்மன் கோயில் உள்ளது. சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் இன்று சிதைந்து போய் கிடக்கிறது.

சம்பாபதியம்மன் கோயிலையும் சதுக்க பூதங்களையும் பற்றி பத்தி பத்தியாய் விவரிக்கிறது சிலப்பதிகாரம். அப்படி ஒரு சிறப்பு கொண்ட வரலாற்றுச் சின்னங்கள் தற்போது சிதிலமடைந்து கேட்பாறின்றி கிடக்கிறது என்பது தான் வேதனைக்குரிய செய்தி.

கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் சம்பாபதி அம்மன் பற்றியும் சதுக்க பூதம் பற்றியும் சொல்கிறேன் கேளுங்கள்.

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக பெருமைவாய்ந்த ஒன்று மணிமேகலைகாப்பியம், ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று அப்படின்னு சொல்வாங்க. இக்காப்பியத்தின் முக்கிய நாயகி மணிமேகலை, கோவலன் மற்றும் மாதவிக்கு பிறந்த மகள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு கண்ணகி மதுரையை எரித்து பின் கேரள எல்லையில் கோயில் கொள்கிறாள்.

மாதவி தன் மகளை ஒரு புத்த துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் துறவு வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு சென்று விட்டுவிடுகிறது.

அத்தீவில் இறங்கியவுடன் மணிமேகலைக்கு தனது முன்பிறப்பு நினைவுக்கு வருகிறது. அதன் பிறகு மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் ஏன் அவளை மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று மந்திரங்களையும் கற்றுக்கொடுகிறது. ஓர் அட்சய பாத்திரத்தையும் கொடுத்தனுப்புகிறது.

அதிலிருந்து எடுக்க எடுக்க குறையாத உணவை புகார் நகரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கி வருகிறாள். ஆனால் மன்னன் உதயகுமரன், மணிமேகலையை தன்னை மணந்து கொள் என அவளை வற்புறுத்துகிறான். அவளோ பயந்து கொண்டு இந்த குச்சரகுடிக்கையில் ஒளிந்து கொள்கிறாள்.

மேருமலை உச்சியில் தோன்றிய சம்பு எனும் தெய்வம் முக்காலத்தில் அரக்கர்களால் புகார் நகர் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்திசை நோக்கி வந்து இந்த நகரத்தில் நிலை கொண்டமையால் இவ்வூரிற்கு சம்பாபதி என்ற பெயர்

இந்த சம்பாபதி அம்மனை மாதவியின் குலதெய்வம் என்கிறது சிலப்பதிகாரம். துரத்தி வந்த உதயகுமாரனிடம் இருந்து மணிமேகலையை மீட்ட தெய்வம் இது தான் என்கிறது மணிமேகலை காப்பியம்.

சம்பாபதி அம்மன் கோயிலை அக்காலத்தில் குச்சரக்குடிகை என அழைப்பார்கள். இக்கோயில் காவிரிபூம்பட்டினத்தில் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது என்றும் மணிமேகலை தகவல் தருகிறது.

வாணிபத்துக்காக மரக்கலத்தில் செல்வோரை மணிமேகலா எனும் தெய்வம் கடலில் நின்று காத்தது போல் நிலத்தில் சம்பாபதி அம்மன் நல்லோரைக் காக்கும் தெய்வமாய் நின்றதாக ஒரு செய்தி உண்டு.

.சிதிலமடைந்து கிடக்கும் சம்பாபதி அம்மன் கோயிலை செங்கலால் ஆன இரண்டு பிரம்மாண்ட பூதங்கள் இன்னமும் காவல் காத்தபடி நிற்கின்றன. இவைதான், ’பொய் பேசினால் கொன்று விடும்’ என இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன இந்த சதுக்க பூதங்கள்.

யாரையெல்லாம் தண்டிக்கும் என இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்.

பிறன்மனை நோக்குவோர், விலைமாதர், போலிச்சாமியார்கள், சூது செய்து பொருள் சேர்க்கும் அமைச்சர்கள், பொய்சாட்சி சொல்பவர் பொதுப்பணத்தை கையாடல் செய்பவர்கள், – இவர்களை எல்லாம் சதுக்க பூதங்கள் கடுமையாக தண்டிக்கும் என்கிறார் இளங்கோவடிகள்.

சரி கோயில் பகுதிக்கு போகலாம் வாங்க..

ஆனால், இப்படியொரு பெருமை வாய்ந்த கோயில் இருப்பதே இங்குள்ள மக்களுக்கு தெரியவில்லை சீர்காழியிலிருந்து பூம்புகாருக்கு போகிற சாலையில் இருக்கிறது சாய்க்காடு சிவன் கோயில். இதன் தென் புறம் செல்லும் தெருவில் சென்று இடதுபுறம் உள்ள அடர்ந்த தென்னை மரங்கள், மூங்கில் பனை மரங்களுக்கு நடுவே ஒரு ஒத்தையடிப் பாதை போகிறது. அந்த வழியாகப் போனால் ஓங்கி வளர்ந்த மரங்களடர்ந்த பகுதியில் இருக்கிறது பண்டைய சம்பாபதி அம்மன் கோவில். முறையான பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால் கோவில் இடிபாடுகளோடு காட்சியளிக்கிறது.

ஆதிகாலத்தில் அழைக்கப்பட்ட ‘குச்சரக் குடிகை’ என்ற பெயருக்கேற்ப தற்போது சம்பாபதியை ஒரு தகர கொட்டகையில் புதிதாய் குடிவைத்திருக்கிறார்கள். பழைய கோயில் சிதைந்து மண்மேடாக உள்ளது அந்த குடிகை வாயிலில் இரண்டு பூதங்களும் உள்ளன.

வடக்கு நோக்கிய இக்குடிகையின் எதிரில் பெரிய உருவில் இரண்டு சதுக்க பூதங்கள் ஆண்பூதம் ஒன்றும் பெண் பூதம் ஒன்றும் சம்பாதியை காவல் காக்கின்றன.

தற்போது அங்குள்ள சம்பாதியை மட்டும் எடுத்து தனி கோயில் கட்டி வைத்துள்ளனர். உடன் விநாயகர் உள்ளார். வாயிலில் பைரவர் உள்ளார். எதிரில் சிம்மமும் பலிபீடமும் உள்ளன.

சம்பாபதி கோவிலுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் இருந்தும், அறநிலையத்துறை அதனை  சாய்க்காட்டின் துணைக் கோவிலாக்கிவிட்டு, அன்றாடம் நடக்கும் பூஜை கூட ஒரு ஏழை பக்தனின் தயவில்தான் நடக்கிறது. பெயர் மருதவாணன்.

செங்கல் சுதையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சதுக்க பூதங்கள் மற்றும் ஒரு பெரிய குதிரை சிலைகள் 2000 ஆண்டு பழமையானவை எனப்படுகிறது. ஆனால், இந்திய, தமிழக தொல்பொருள் துறைகளால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டன.

இது கண்ணகியும், கோவலனும் , மாதவியும் உலவிய மண். வணங்கிய தெய்வம் என்பது தமிழர்களின் நினைவில் இருந்தே அழிந்துவிட்டன. தமிழ் தமிழ் என பெருமை பேசும் நாம் மூன்றாயிரம் வருடம் பழமை கொண்ட இக்கோயிலை கூட காப்பாற்றாவிட்டால் வரலாறு ஒருபோதும் நம்மை மன்னிக்காது.

திமுகழக ஆட்சியில் பூம்புகாரை புனரமைப்பு செய்து உள்ளனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized11 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Translate »
If that fails, we direct you to the appropriate local gaming board (e. Following klangspot playlists is a simple way to discover carefully selected music for different genres, moods and moments. How to use storytelling in affiliate marketing.