இந்தியா
சட்டமன்ற தேர்தல் 2026 திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை – சிறப்பம்சங்கள்.

சட்டமன்ற தேர்தல் 2026 திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை – சிறப்பம்சங்கள்.
தமிழ்நாடே…!. தலைப்புச் செய்திக்கு ரெடியா…?
- காலை உணவுத் திட்டம் 6முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சம் மாணவ மாணவியருக்கு விரிவுபடுத்தப்படும்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- உயர்கல்வி படிப்தை ஊக்குவித்திட புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- நெல்கொள்முதல் விலை ரூ.3500 குவிண்டாலுக்கு வழங்கப்படும்.
- கரும்பு கொள்முதல் விலை ரூ.4500 டன்னுக்கு வழங்கப்படும்.
- பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.
- முதியோர் உதவித்தொகை ரூ.1200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1500 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
- மகளிர் சுய உவிக்குழுவினர் தொழில்முனைவோராக ஆகும்பொருட்டு ரூ.5 லட்சம் பிணையில்லா கடன் வழங்கப்படும்.
- அணைத்து மாவட்ட தாலுக்கா அளவிலான அரசு மருத்துவமனைகளில் உள்ள டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்படும்.
- அரசு ஊழியர் ஆசிரியருக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
- ஒன்றிய அரசு 8வது ஊதியக்குழு அமைத்த உடன் அதனை தமிழ்நாட்டில் அமல்படுத்திட ஒரு குழு அமைக்கப்படும்.
- அரசுப் பணிகளில் உள்ள 150000 காலி பணியிடங்கள் விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் தவறாது வழங்கப்படும்.
- உயர்கல்வி படிக்கும் மாணவரை ஊக்குவிக்க கல்லூரி மாணவர்களுக்கு 2000000 மடிக்கணினிகள் வழங்கப்படும்.
- 5000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
- 1000 கிராம கோவில்கள் மறு சீரமைக்கப்படும்.
- அணைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தங்குமிடம் உணவு வசதிகளுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.
- 50 புதிய செம்மொழி புங்காக்கள் அமைக்கப்படும்.
- 10000 புதிய பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
- மொழிப்போர் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்த கொள்ள ஒரு காட்சிக்கூடம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்.
- 1000 புதிய குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும்.
- சிறப்பாக பணி செய்யும் திருநர்கள் திருநங்கைகளுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும்.
- அணைத்து மருத்துவமைனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- பத்திரிகையாளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக அவர்களுக்கு வழங்கப்படும் அணைத்து உதவித்தொகைகளும் இருமடங்காக்கப்படும்.
- அணைத்து தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.
- இல்லத்தரசி என்ற புதிய திட்டம்.வாஷிங்மெஷின், டிவி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின்சார அடுப்புகளை மகளிர் வாங்கிட உதவியாக வருமானவரி செலுத்தாத அணைத்து குடும்பங்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகளிலேயே அந்த பொருள்களை புதியதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பொருள்களுக்கு மாற்றாக வாங்கவோ ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.












