Connect with us

சினிமா

அப்பா வயதுள்ள ஹீரோக்களுடன் ஜோடி சேருவது ஏன்?: ஷ்ருதிஹாசன்!

Published

on

தன் அப்பா வயதுள்ள கதாநாயகர்களுடன் ஜோடி சேர்வது குறித்து எழுந்துள்ள கேலிகளுக்கு ஷ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார்.

‘ஏழாம் அறிவு’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஷ்ருதிஹாசன். இதன் பிறகு ‘புலி’, ‘3’ உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக இவர் நடிப்பில் ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. அதன் பிறகு ‘வீர சிம்ஹா ரெட்டி’, ‘வால்டர் வீரையா’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி போன்ற தன்னைவிட பல வயது மூத்த கிட்டத்தட்ட தன் அப்பாவின் வயதை ஒத்த நடிகர்களுடன் அதிகமாக ஷ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடிப்பதாக இணையத்தில் கேலிகள் வந்தது.

இது குறித்து தற்பொழுது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷ்ருதிஹாசன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “கதாநாயகிகள் மட்டுமல்ல கதாநாயகர்களும் தன்னைவிட வயது குறைவான நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தே நடிக்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன். இது அந்த கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவைப்படுவது. மேலும், இது நாங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு கிடையாது. அது அந்த கதைக்கும் இயக்குநரும் எடுத்த முடிவு எனும் பொழுது இப்படி வரும் கேள்விகளை நானோ இயக்குநரோ அல்லது அந்த கதாநாயகரோ பொருட்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது.

இதுதான் என்னுடைய புரிதல். இந்த புரிதல் இல்லாமல் கேலி செய்பவர்கள் குறித்து நான் எந்த விதத்திலும் கவலைப்பட போவது கிடையாது. அது மட்டும் அல்ல யாரும் ஷ்ருதிஹாசன் வயதான பெண் போல தெரிகிறார் என்று சொல்வதில்லை. நான் இப்பொழுதும் பாப்பா போல இளமையாக இருக்கிறேன் என்று இந்த கமெண்ட்டை பாசிட்டிவாக எடுத்துக் கொள்வேன்” என்று இதை இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஷ்ருதிஹாசன்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?