Connect with us

உலகம்

ஒரே நேரத்தில் 100 பேர்களை கொல்லும் கொடிய விஷப்பாம்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published

on

ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷ பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பாம்புகள் ஒருமுறை கடித்தால் ஒரு மனிதருக்கு மட்டுமே பாதிப்பு அல்லது மரணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தைவான் நாட்டில் உள்ள கொடிய வகை விஷப்பாம்பு ஒரே நேரத்தில் 100 பேர்களை உயிர் இழக்க வைக்கும் அளவிற்கு கொடிய விஷத்தன்மை கொண்டது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்கூல் ஆஃப் கெமிஸ்ட்ரி, பிரிஸ்டல் பல்கலைக்கழகம் 10 கொடிய பாம்புகளின் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில் இதில் இந்த பாம்பு முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை கடித்தால் 110 மில்லி கிராம் விஷம் வெளிப்படும் என்றும் இந்த விஷம் 100 மனிதர்களை அல்லது 250000 எலிகளைக் கொல்ல போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த பாம்பு கடித்தால் தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும் என்றும் இந்த பாம்பு கடித்த ஒரு சில நிமிடங்களில் மருத்துவ உதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் கூச்ச சுபாவம் என்று கூறப்படும் இந்த பாம்பை சீண்டினால் மட்டுமே கடிக்கும் என்றும் ஆனால் உலகிலேயே மிக கொடுமையான விஷத்தைக் கொண்ட இந்த பாம்பு தைவான் மற்றும் ஆஸ்திரேலிய காடுகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பாம்பின் நிறம் ஒவ்வொரு பருவத்திற்கும் மாறுபடும் என்றும் குளிர்காலத்தில் கருப்பாகவும் கோடைகாலத்தில் மங்கலாகவும் இருக்குமென்றும் பெரிய கண்களை கொண்ட பாம்பு இது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?