தமிழ்நாடு
நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட விஷம்: அதிர்ச்சி தகவல்

கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக மூன்று மர்ம நபர்கள் விஷத்தை குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா லட்சுமி என்பவர் கடந்த 12ஆம் தேதி சாலையில் நடந்து சென்றபோது திடீரென அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக குளிர்பானம் குடிக்க வைத்தனர் .
அந்த குளிர்பானத்தில் விஷம் கலந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் நடுரோட்டில் மயக்கமடைந்தார். இதனை அடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக தெரிகிறது
இதனை அடுத்து கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலை வாங்குவோம் என்றும் மாணவியின் உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.