Connect with us

உலகம்

செயற்கை கருப்பை.. வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகள்.. இனி 10 மாதம் சுமக்க தேவையில்லை!

Published

on

செயற்கை கருப்பை மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியிருப்பதை அடுத்து இனி தாய்மார்கள் பத்து மாதம் சுமந்து குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லாத நிலை விரைவில் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளை கருத்தரிக்க முடியாதவர்கள், மலட்டுத் தன்மை உடைய பெற்றோர்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட காரணங்களால் குழந்தை பிறக்க சிக்கலான நிலை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

பெர்லினை சேர்ந்த EctoLife என்ற நிறுவனம் செயற்கை கருப்பை முறையில் குழந்தைகளை உருவாக்கி வளர்க்கும் விஞ்ஞானத்தை கண்டுபிடித்துள்ள நிலையில் இதனை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. தாயின் கருவில் குழந்தை வளர்வது போலவே இந்த செயற்கை கருப்பையில் குழந்தையை வளர்க்க முடியும் என்றும், இந்த முறையின் மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. குழந்தை பெற்று கொள்ள முடியாதவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அதேபோல் ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருப்பதை அடுத்து அந்த நாடுகளில் இந்த முறை அதிகம் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெற்றோர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட கருமுட்டை மற்றும் விந்து ஆகியவற்றை செயற்கை முறையில் கருப்பையில் வைத்து அதன் அதனை அடுத்து குழந்தையாக செயற்கை கருப்பையினுள் வைக்கப்படுகிறது. குழந்தை செயற்கை கருப்பைக்குள் வளரத்தொடங்கியதும் தொப்புள் கொடி மூலம் செறிவூட்டப்பட்ட சத்துப் பொருட்களை குழந்தைகளுக்கு அனுப்பும் வசதியும் இதில் உண்டு.

அதுமட்டுமின்றி மரபணு ரீதியாக சில வசதிகளை வடிவமைக்கவும், மாற்றி அமைக்கவும் முடியும். குறிப்பாக குழந்தையின் புத்திசாலித்தனம், உயரம், கண் நிறம் முடி உள்ளிட்டவற்றில் ஏதேனும் மரபணு குறைபாடுகள் இருந்தால் அதை திருத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் குழந்தை செயற்கை கருப்பையில் எப்படி வளர்கிறது என்பதை பெற்றோர்கள் அவ்வப்போது தங்கள் வீட்டிலிருந்தே மொபைல் போனில் பார்த்துக் கொள்ளும் வசதியும் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த செயற்கை கருப்பை மூலம் 75 லேப்களில் சுமார் 30 ஆயிரம் குழந்தைகளை வருடத்திற்கு உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளதை அடுத்து இனி பத்து மாதம் சுமந்து குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?