பிற விளையாட்டுகள்
அர்ஜெண்டின்னா வீரர்களை சுற்றி வளைத்த ஒரு லட்சம் ரசிகர்கள்: ஹெலிகாப்டரில் தப்பித்த வீரர்கள்
Published
1 month agoon
By
Shiva
உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் அணியான அர்ஜென்டினா அணி தங்கள் நாட்டிற்கு கோப்பையுடன் சென்ற போது சுமார் ஒரு லட்சம் வீரர்கள் ரசிகர்கள் வீரர்களை சுற்றி விட்டதால் அணி வீரர்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The Argentine soccer team that won the World Cup title ride on top of an open bus during their homecoming parade in Buenos Aires, Argentina, Tuesday, Dec. 20, 2022. (AP Photo/Rodrigo Abd)
சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின என்பதும் இந்த போட்டியில் மெஸ்ஸியின் மிக அபாரமான கோல்கள் அந்த அணிக்கு உலகக் கோப்பையை பெற்று தந்தது.
இதனை அடுத்து அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையுடன் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்ற போது அங்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் உலக கோப்பையுடன் வந்த அர்ஜென்டினா வீரர்கள் சென்ற பேருந்தை சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் சுற்றி வளைத்து உலக கோப்பையை பார்க்கும் ஆர்வத்தில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அந்த பேருந்தில் சென்று கொண்டிருந்த வீரர்கள் அடுத்த சில மணி நேரத்தில் விமானத்தில் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் அவர்களை உடனடியாக அங்கிருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அர்ஜெண்டினா அரசு அதிரடியாக ஹெலிகாப்டரை அனுப்பி பேருந்தில் இருந்த வீரர்களை அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றது. உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா வீரர் களை பார்க்க சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் திரண்டதால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
You may like
-
உலகக்கோப்பை ஹாக்கி: பெல்ஜியம் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது ஜெர்மனி அணி..!
-
எம்.எஸ்.தோனி மகளுக்கு மெஸ்ஸி கொடுத்த மறக்க முடியாத பரிசு.. வைரல் புகைப்படங்கள்!
-
வெற்றிக்கு பின் கணவருக்கு முத்தம் கொடுத்த மெஸ்ஸி மனைவி: செம ரொமான்ஸ் புகைப்படங்கள்!
-
பணம் பெற்று கொள்ளாமல் பாலியல் சேவை.. வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் தந்த அறிவிப்பு!
-
குரோஷியாவின் அரையிறுதி கனவு தகர்ப்பு.. அடுத்தடுத்து கோல்போட்டு அசத்திய அர்ஜெண்டினா!
-
தோல்வியால் துவண்டு இருந்த நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷிய வீரர் மகன்: நெகிழ்ச்சியான வீடியோ!