தமிழ்நாடு
16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: திமுக பிரமுகரின் மகனை கைது செய்ய கோரி தாய் தீக்குளிக்க முயற்சி

தன்னுடைய 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சி ஒன்றிய தலைவரின் மகனை கைது செய்ய வேண்டும் என தாய் ஒருவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை காவல்துறையினர் மீட்டுள்ளனர் இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம் இருக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனது 16 வயது மகளைக் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய திமுக ஊராட்சி தலைவரின் மகன் மற்றும் நீதி கேட்டுச் சென்ற பொழுது தங்களைத் தாக்கிய திமுக தலைவரின் உறவினர்களையும் உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீ குளிக்க முயன்ற தாய்!
தமிழகத்தில் தினந்தோறும் திமுகவினரின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில்…இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்யவேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தமிழக பாஜக
தயங்காது! என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.




















