Connect with us

இந்தியா

அந்த பெண் தனக்குத்தானே சிறுநீர் கழித்து கொண்டார்… ஏர் இந்தியா சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்?

Published

on

ஏர் யார் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இன்று நீதிமன்ற விசாரணையில் அவர் தான் அவர் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்றும் அந்த பெண் தனக்குத்தானே சிறுநீர் கழித்துக் கொண்டார் என்றும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் சங்கர மிஸ்ரா என்ற பயணி மது போதையில் இருந்ததாகவும் அப்போது அவர் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்துவிட்டு தனது மர்ம உறுபையும் காட்டிக்கொண்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி விமான நிலைய பணியாளர்களிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் போதை தெளிந்தவுடன் சங்கர மிஸ்ரா அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் இதனால் பெரிய பிரச்சனை தனக்கு ஏற்படும் என்றும் கூறியது கதறி அழுததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனப்படுகிறது.

இருப்பினும் இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானது என்பதும் சமூக ஊடகத்தில் இது குறித்த புகைப்படம் வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனமே இது குறித்து புகார் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து காவல்துறையினர் சங்கரமிஸ்ராவை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். இதன்பிறகு தான் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சங்கரமிஸ்ரா தன் மீது தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நான் அந்த பெண் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்றும் அவர் தனக்குத்தானே சிறுநீர் கழித்து இருப்பார் என்றும் அவருக்கு 70 வயதுக்கு மேல் ஆவதால் சிறுநீர் தொடர்பான பிரச்சனை இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் அந்த பெண் மீது சிறுநீர் கழித்து இருந்தால் அந்த பயணியின் பக்கத்தில் உள்ள பயணியும் பாதிக்கப்பட்டு இருப்பார், ஆனால் அவர் எந்த புகாரும் அளிக்கவில்லையே என்றும் அவரது வழக்க றிஞர் வாதிட்டு உள்ளார். இந்த வழக்கின் விசாரணையை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?