செய்திகள்
விறுவிறுப்பான அதிமுகவின் அரசியல் களம் – அதிமுக பொதுச் செயலாளர் யார்? பரபரப்பான உடனடி அப்டேட்…

அதிமுக பாஜக கூட்டணி அமைத்திட அச்சாரமாக முதலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவின் நான்கு அணிகளையும் ஒன்று சேர்த்திட பாஜக பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்க தொடர்ந்து எடப்பாடி மறுப்பு தெரிவித்து வருவதால் பாஜக புதிய திட்டம் தீட்டியிருக்கிறது. அதன்படி செங்கோட்டையனை அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக்கி விட்டு அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் அந்தியூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்துள்ளார். எனவே, வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் மிக விறுவிறுப்பாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கலாம். எடப்பாடியாரின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சுவாரசியமான தகவல் ஏதும் இந்த நிமிடம் வரை இல்லை.















