தமிழ்நாடு
எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்: முழு பட்டியலையும் வெளியிடுகிறார் முக ஸ்டாலின்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு பணியை முடித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் திமுக 174 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 60 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் காங்கிரஸ் 25 தொகுதிகளில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடது கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6 தொகுதிகளில், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், முஸ்லிம் லீக் மூன்று தொகுதிகள் ஆகியவை போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தவிர மீதமுள்ள அனைத்து கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த முழு பட்டியலை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.



















