Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (2020 ஜூன் 08 முதல் 14 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

வாரபலன்

மேஷம்:

புதுமைகளை விரும்பும் மேஷராசியினரே, இந்த வாரம்  அனுகூலமான பலன்கள் உண்டாகும்எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பின் வேகம் பிடிக்கும்வீண்மனசஞ்சலம் உண்டாகும்நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர் பான   அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கை யாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வர பிரச்சனைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

*************************************************************************************

ரிஷபம்:

நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடும் ரிஷப ராசியினரே இந்த வாரம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை   தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம்பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.

குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்கணவன், மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லதுபிள்ளைகளுக்காக  செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவைவாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லதுஇல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: மகாலட்சுமிக்கு ரோஜா இதழால் அர்ச்சனை செய்து பூஜித்து வாருங்கள். நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

*************************************************************************************மிதுனம்:

மின்னல் போன்ற வேகத்துடன் செயல்படும் மிதுன ராசியினரே இந்த வாரம்  வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.

குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு  கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபமேற்றி வழிபட நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

*************************************************************************************

கடகம்:

பயணத்தில் அதிக நாட்டம் கொண்ட கடக ராசியினரே இந்த வாரம்  எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்

குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்ச லும், பண விரயமும் இருக்கும்புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்

பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்எதிர்பார்த்த தகவல்கள் வரும்

மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லதுகல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

பரிகாரம்: அம்மனுக்கு எலுமிச்சையில் மாலை அணிவிக்க தடைகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

*************************************************************************************

சிம்மம்:

புதிய பொறுப்புகளை பெறப் போகும் சிம்மராசியினரே இந்த வாரம் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பிய படி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடை யில் நெருக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: கோவில்களில் உள்ள குளத்தில் நீராடி சுவாமியை வழிபட்டு வாருங்கள். நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

*************************************************************************************

கன்னி:

சின்ன சின்ன வசதிகளை எதிர் நோக்கி காத்திருக்கும்  கன்னிராசியினரே  இந்த வாரம் பணவரத்து அதிகமாகும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடை வீர்கள். மனதுணிவு உண்டாகும்எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்த யங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவைகடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லதுமனதில் உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: தினமும் பஞ்சமுக திரி போட்டு விளக்கேற்றி வழிபடுங்கள். எதிரிகள் தொல்லை இருக்காது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

*************************************************************************************

துலாம்:

உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை எதிர்பார்க்கும் துலா ராசியினரே இந்த வாரம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதக மாக நடைபெறும். எதிர்பாராத பண தேவை உண்டா கும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள். எதிலும் இழுபறியான நிலை காணப் படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம். கவனம் தேவை.

குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர் கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப் படுவார்கள். செலவுகள் கூடும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: கருடாழ்வாரை போற்றி வணங்குங்கள். தினமும் வெல்லம் நிவேதனம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

*************************************************************************************

விருச்சிகம்:

வாழ்க்கையில் சீரான வளர்ச்சி காணும் விருச்சிக ராசியினரே இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.

குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

மாணவர்களுக்கு உங்களது செயல் களுக்கு பாராட்டு கிடைக்கும். கல்வியில் வெற்றி அடைய மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்

பரிகாரம்: உறையூர் வெக்காளி அம்மனை மனதால் வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

*************************************************************************************

தனுசு:

யாரிடமும் மாற்றுக் கருத்துகளை கூறாது தன் போக்கில் செயல்படும் தனுசு ராசியினரே இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல் பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர் களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்

பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும்

மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்

பரிகாரம்: குரு பகவானுக்கு முல்லை மலரை சாற்றி வழிபட துன்பங்கள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

*************************************************************************************

மகரம்:

பல இன்னல்களுக்குப் பிறகு வாழ்வில் வெளிச்சத்தைக் காணப் போகும் மகர ராசியினரே இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். வார இறுதியில் சேருவதால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக  பேசுவது  நல்லதுஉறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள் வீர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: காகத்திற்கு எள் சாதம் வைக்க முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

*************************************************************************************கும்பம்:

வீண் விவகாரங்களில் தலையிடாத கும்பராசியினரே! நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்று செயல் படுவீர்கள். இந்த வாரம்  சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.

பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும்

மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: அம்பாளுடன் கூடிய சிவ பெருமான் கோவிலுக்குச் சென்று வர மனதில் சந்தோஷம் பிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

*************************************************************************************மீனம்:

கற்பனைக் குதிரைகளை ஓட விட்டு பின்பு கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் மீன ராசியினரே இந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள்பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி  மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள்உறவினர்களுடன்  சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம்.

மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: ஏழை மாணவர்களின் கல்விக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து உதவுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

*************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Martinstools | professional saas tools for everyone. Surowce do produkcji suplementów diety.