Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (2020 ஜூன் 01 முதல் 07 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

வாரபலன்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 

உறவுகளை மதிக்கும் எண்ணங்களை கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம்

தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

 

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.

.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு  சாதகமான பலன் காண்பார்கள்.

 

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால்  செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம்.

 

பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

 

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

 

பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

 

நிதானங்களை கடைபிடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும்.  தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது.

 

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.

 

குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில்  அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

 

பெண்களுகள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும்

 

மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு  மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

 

பரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு  உயரும்.  மன மகிழ்ச்சி உண்டாகும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

 

அனைவரையும் தனது பேச்சால் கவரும் மிதுன ராசி அன்பர்களே. இந்த வாரம் நீங்கள் விடா முயற்சியுடைவர் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

 

தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

 

குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்   மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.

 

மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

 

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும். மனக் கவலை தீரும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

 

அயராது உழைக்கும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் பெறும்.  மனதில் தைரியம் கூடும்.  சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

 

தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

 

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

 

பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

 

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

 

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபட பணகஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

 

கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம்.  ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.  எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது.

 

தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.

 

குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

 

பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.

 

மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

 

பரிகாரம்: கார்த்திகை விரதம் இருந்து முருக கடவுளை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

 

தனது வேலைகளை எந்த நேரத்திலும் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

 

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக  அலைய வேண்டி இருக்கும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

 

குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

 

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.

 

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

 

பரிகாரம்: சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்சனை குறையும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

 

மனதில் பட்டதை தைரியமாக எடுத்துரைக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் 

பணவரத்து அதிகரிக்கும். நீங்கள் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமுடையவர்.  மன குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும்.

 

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

 

குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.

 

பெண்களுக்கு: மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.

 

மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

 

பரிகாரம்: சுவாமிமலை முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

 

பசி என்று வந்தவர்களுக்கு மனமுவந்து உணவு கொடுக்கும் குணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம்  ஏற்படும். எதிர் பாலினத்தாரால்  லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம்.  காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.

 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள்  குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும்.

 

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.

 

பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும்.

 

மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்.

 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

 

எல்லோரிடமும் பொருமையாக பேசும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

 

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. 

தேவை.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

 

குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

 

பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

 

மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.  திறமையுடன்  காரியங்களை செய்வீர்கள்.

 

பரிகாரம்: குரு ராகவேந்திரரை வணங்கி வர மனகவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

 

அடுத்தவர்கள் செய்த செயலை பாராட்டும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே  இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

 

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல்  வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு  சங்கடப்பட வேண்டி இருக்கும்.  வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.

 

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.

 

பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்

 

மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

 

பரிகாரம்: மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

 

எல்லாரிடமும் பாரபட்சம் பார்க்காது முகமலர்ந்து பழகும் கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

 

கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள்  பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.  வீண் அலைச்சல் உண்டாகலாம். 

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

 

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான  விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.  வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது

 

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன்  சுமுகமாக பேசி பழகுவது நல்லது. 

 

மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது. 

 

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

 

மற்றவர்களை சார்ந்து இல்லாது என்றும் தன்னிச்சையாக செயல்படும் மீன ராசி அன்பர்களே நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் மிக்கவர்கள். இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும்.  விருந்து கேளிக்கை  நிகழ்ச்சியில்  கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.

 

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். 

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.

 

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

 

பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

 

மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.

 

பரிகாரம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Martinstools | professional saas tools for everyone. produkcja suplementów diety (2026) : koszty, wymogi i proces cdmo [kompendium].