Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (2020 ஜூன் 15 முதல் 21 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

வாரபலன்

மேஷம்:

எடுத்த காரியங்களை செவ்வனே செய்து விடும் மேஷராசியினரே இந்த வாரம் எதிலும்  எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம்வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும்சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

பரிகாரம்: கந்தகுரு கவசத்தை படிக்க துன்பங்கள் விலகும்.

*************************************************************************************

ரிஷபம்:

எல்லோராலும் நேசிக்கப் படும் ரிஷபராசியினரே, இந்த வாரம் கோபத்தை குறைத்து கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக் கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்கு களை தள்ளிப்போடுவது நல்லது.

தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக்கொள்வது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். வார இறுதி யில் இந்தநிலை மாறி நன்மை ஏற்படும்

பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் நன்மைகள் அதிகமாகும்.

*************************************************************************************

மிதுனம்:

குதூகலமாக காட்சியளிக்கும் மிதுன ராசியினரே இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக் கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.

மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்ய  மனதில் நினைத்தது நிறைவேறும்.

*************************************************************************************

கடகம்:

சிக்கல்களின்றி வாழ ஆசைப்படும் கடக  ராசியினரே இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.

பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

பரிகாரம்: நாக தேவதைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

*************************************************************************************

சிம்மம்:

எந்தக் காரியத்திலும் சமாதானமாகாத சிம்ம ராசியினரே நீங்கள் வசீகர பேச்சாற்றல் கொண்டவர். இந்த வாரம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை  தரும்அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும்

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: சிவனடியார்களுக்கு மரியாதை கொடுத்து தொண்டு புரிந்து வாருங்கள்.

*************************************************************************************

கன்னி:

நிதானமாக அனைத்து காரியங்களையும் முடிக்கும் கன்னி ராசியினரே இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள்  விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன்  தரும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும்பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் குறைய லாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப் பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்

பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: விநாயகருக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் உண்டாகும்

*************************************************************************************

துலாம்:

இரவு பகல் பாராமல் உழைக்கும் துலாராசியினரே அனைவரையும் அனுசரித்து செல்வதில் திறமை உடையவர். இந்தவாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்

பரிகாரம்: சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபமேற்றி வழிபட துன்பங்கள் விலகும்

*************************************************************************************

விருச்சிகம்:

முயற்சிகளை அதிகப்படுத்தி வெற்றியடையும்  விருச்சிக ராசியினரே இந்த வாரம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கி டையே  மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு  நிம்மதியை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.  

பரிகாரம்: வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து  வழிபடுங்கள்.

*************************************************************************************

தனுசு:

அநியாயத்தை எதிர்த்து போராடும் தனுசு ராசியினரே  இந்தவாரம் இறுதியில் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். பெறுவதால் மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர் களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும்

பெண்களுக்கு வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது  நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும்

மாணவர்களுக்கு  ஆசிரியர்  சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை நிவேதனம் செய்து பிரச்சினைகளை குறைக்கலாம்.

*************************************************************************************மகரம்:

எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகர ராசியினரே இந்த காலகட்டத்தில் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்

குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். .

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும்

மாணவர்களுக்கு  கல்வியில் கவனம் செலுத்துவது நல்லதுபெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வணங்கி வர காரியங்களில் வேகம் உண்டாகும்.

*************************************************************************************

கும்பம்:

எளியவர்களுக்கும தாராள குணத்துடன் உதவி செய்யும் குணமுடைய கும்ப ராசியினரே இந்த வாரம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங் கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவு கள் அதிகரிக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லதுபுதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.

பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்

மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: முன்னோர்களை வழிபட பணத்தேவை பூர்த்தியாகும்.

*************************************************************************************

மீனம்:

மனதில் மகிழ்ச்சி அதிகமாக கொண்டிருக்கும் மீன ராசியினரே நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த வாரம்   உடல் சோர்வு உண்டாகலாம்வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமை யாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரி யங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார் கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

பரிகாரம்: கடலில் நீராடி திருச்செந்தூர் ஆண்டவரை போற்றி துதியுங்கள்.

*************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா22 மணி நேரங்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி ரேவதி நட்சத்திர பெயர்ச்சி 2026: அடுத்த 4 மாதங்கள் ராஜயோகம்! ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும் குவியும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

Translate »
power only wyoming. Learn more about troubleshooting wordpress. Heavy equipment transport somerset nj.