சினிமா செய்திகள்
திருவாரூர் தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால்!

நடிகர் விஷால் திருவாரூர் தேர்தலில் போட்டியிட தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற நடிகர் விஷால், ஜெயலலிதா மறைந்தவுடன் ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முதன்முறையாக களமிறங்க வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரை தேர்தலில் போட்டியிட விடாமல் அதிமுகவினர் சூழ்ச்சி செய்ததாக பின்னர் விஷால் தரப்பு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தற்போது கருணாநிதி மறைவுக்கு பிறகு காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், போட்டியிட நடிகர் விஷால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆர்.கே. நகரில் நடைபெற்றது போன்ற அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும், எந்த சூழ்ச்சி வந்தாலும் முறியடித்து போட்டியிட வழக்கறிஞர்கள் மற்றும் முன் அனுபவமிக்கவர்களுடன் கலந்து விஷால் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டது, விஷாலை கைது செய்தது போன்ற நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கவும் விஷால் திட்டமிட்டுள்ளாராம்.



















